பயிர்பாதுகாப்பு செய்ய உதவும் சீத்தா (PEST CONTROL BY CUSTARD APPLE)
மானாவாரி நிலங்களில் தானாக வளர்ந்து கனி கொடுக்கும் சிறு பழமரம். இதன் இலை, விதை, முற்றாக் கனி, மற்றும் வேர்களை பல நாடுகளில் பூச்சிக் கொல்லிகளாக பயன்படுத்துகிறார்கள். பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலும், மனிதர்களுக்கோ நன்மை செய்யும் பூச்சிகளுக்கோ தீங்கு செய்வதில்லை.
3.1. இலைவடிநீர் அல்லது கஷாயம் (LEAF EXTRACT)
50 கிராம் சீத்தா இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி அத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசலை நன்கு கலக்கி பயிரில் தெளிக்கலாம்.3.2. விதைக்கரைசல் (SEED SOLUTION)100 கிராம் ஓடு நீக்காத விதைகளை நன்கு பொடித்து 1 லிட்டர் நீரில் கலந்து ஒரு இரவு முழுக்க ஊற வைத்து அடுத்த நாள் காலையில் விதைக் கரைசலை வடிகட்டி இத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசல் கலந்து பயன்படுத்தலாம்.3.3. எண்ணெய்க்கரைசல் (OIL SOLUTION)
சீத்தா விதைஎண்ணெய் 30 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீரை கலந்து அத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசலைக் கலந்து பயிருக்குத் தெளிக்கலாம்3.4. இதர பூச்சிகள் (OTHER PESTS)
முட்டைக்கோசுப்புழு, புரோடீனியாபுழு, தானியத்தை சேதப்படுத்தும் வண்டுகள், பயறுகளைத் துளைக்கும் வண்டுகள், பருத்தியில் பஞ்சினை தாக்கும் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாவில் உள்ளன.சீத்தா இலை, முற்றாதகனி. விதை, எண்ணெய், மற்றும் வேரில் உள்ளவை தொடு நஞ்சாகவும், குடல் நஞ்சாகவும் செயல்பட்டு பூச்சிகளை அழிக்கின்றன.
No comments:
Post a Comment