முக்கிய இயற்கை எருக்கள் - (IMPORTANT NATURAL MANURES)
1. கோழி எரு
மற்ற இயற்கை உரங்களை ஒப்பிடும்போது இது கூடுதலான சத்துக்களைக் கொண்டது.ஆழ்கூள முறையில் சேகரிக்கும் கோழி எருக்கள் இன்னும் சிறப்பானவை.அதில் உள்ள சத்துக்கள் விவரம்.தழைச்சத்து: 3.03 சதம்.மணிச்சத்து: 2.63 சதம்.சாம்பல் சத்து 1.40 சதம். மக்காத புதிய கோழி எருக்களை பயிருக்கு போடக் கூடாது.அல்லது 4 மாதங்கள் நன்கு மக்கிய பிறகே போட வேண்டும்.2.பிண்ணாக்கு வகைகள்
எண்ணெய்வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையின் பெயர் பிண்ணாக்கு. சாப்பிடக் கூடியவை, சாப்பிடக் கூடாதவை என இரண்டு வகை இதில் உண்டு.இரண்டையுமே பிண்ணாக்காக பயன்படுத்தலாம்.பிண்ணாக்கின் விலை ஆனைவலை குதிரைவிலை ஆகிவிட்டதால் இதனை உபயோகிப்பதில் சிரமம் உள்ளது.பொதுவாக பிண்ணாக்குகளில் கீழ்கண்ட அளவில் சத்துக்கள் உள்ளன.தழைச்சத்து: 2.5 முதல் 7.5 சதம் வரை மணிச்சத்து: 0.8 முதல் 4.0 சதம் வரை.சாம்பல் சத்து: 1.2 முதல் 2.2 சதம் வரை.3. மக்கு உரம் அல்லது கம்போஸ்ட் உரம்முறையாக மக்க வைத்த அங்கக உரத்தின் பெயர் கம்போஸ்ட் மக்க வைக்கும் பொருட்களுக்கு ஏற்ப சத்துக்கள் வேறுபடும்.எல்லா இயற்கை எருக்களைப் போலவும் இது பயிர்களுக்கு தாய்ப்பால் மாதிரி.தாவரக் கழிவுகள், கால்நடைகக் கழிவுகள், மனிதக் கழிவுகள், கிராமக் குப்பை, நகரக் குப்பை, இப்படி எல்லாவற்றையும் மக்கவைக்கலாம்.மக்கவைத்து இயற்கை உரமாக மாற்றலாம்.அங்ககப் பொருட்களை மக்க வைக்க சில நுண்ணுயிர்களும், பேருயிர்களும் முக்கிய பங்காற்றுகின்றன.மண்புழுக்கள், சாணக்கரைசல், அமுதக்கரைசல், புளுரோட்டஸ் காளான் வித்துக்கள், இ.எம். நுண்ணுயிர்க்கரைசல் ஆகியவை மகத்தான உதவி செய்கின்றன மக்கு உரம் தயாரிக்க.மக்கு உரங்களை எல்லா பயிர்களுக்கும் இடலாம்.மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு உரம் போன்றவை அனைத்தும் இந்த வகைகளே
No comments:
Post a Comment