Friday, April 13, 2018

களைகள் - நன்மையா தீமையா?

இதுதான் தன் தலையில் தானே  மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது  என்பதா? ?

.
களைகள் என்றாலே அவை தனது முதல் எதிரிகள் என்ற நினைப்பு களைக்கொல்லிகளின் வரவிற்குபின் விவசாயிகளுக்கு  வந்துவிட்டது.
.
களைக்கொல்லிகளின் வருகைக்கு முன் நமது விவசாயிகள்  அவற்றினை மிகவும் எளிதாக கையாண்டு கொண்டிருந்தார்கள்.
.
களைகளைப்பற்றிய புரிதலை நமது விவசாய சமூகம் இழந்துவிட்டபின் அதுவே  மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது.
.

களைகள்  விவசாயிகளுக்கு என்னதான் நன்மை தருகின்றன.?

.
களைகள் தான் வளரும்போது அதனது வேர்கள் நுண்ணுயிர்களுடன் சத்துமாற்று முறை மூலம் ஒட்டுறவை ஏற்படுத்திக்கொண்டு வான்வெளிப்பகுதி தழைச்சத்தை நிலைநிறுத்துவதோடு மற்ற கிடைக்காநிலை சத்துக்களையும் கிடைக்கச்செய்கிறது.
.
மற்றும்   களைகள் ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அவை முற்றினாலோ / இடையில் காய்ந்துவிட்டாலோ நிலத்தில் உதிர்ந்து  அதிலிருந்து அனைத்து சத்துக்கள் மற்றும் organic carbon 
சாகுபடி  பயிர்களுக்கும்  மற்ற தாவரங்களுக்கும் அவ்வளவு ஏன் மீண்டும் நுண்ணுயிர்களுக்கும் போதிய உணவை அளிக்கிறது.
.
 மழை பெய்யும்போது தண்ணீர் . வயல்கள் ஒரு அளவிற்கு மட்டுமே அதனை தன்னுள் பிடித்து வைத்துக் கொள்ளும்.
.
மழையின்  அளவு அதிகரிக்கும்போது மண்ணில் உள்ள சத்துக்கள் கரைந்து மண்ணிற்கு அடியே சேமிப்பு பகுதிகளுக்கு செல்லவும்,  வயலைவிட்டு வெளியேறவும் செய்கின்றன.
.
வெளியேறும் சத்துக்களில் அதிக அளவில் இருக்கும் பேரூட்டங்களாக இருந்தால் பரவாயில்லை அவற்றினை விவசாயிகள் கடைகளில் வாங்கி போட்டு விடுவார்கள்.
.
மிகக் குறைந்த அளவில் இருக்கும் மற்றும் விரைவில் மண்ணில் சேர்த்திட இயலாத ( Fe, Mn, Zn, Cu ,  Bo )  ஆகிய நுண்ணுாட்டங்கள் வெளியேறிவிட்டால் அதனை ஈடு செய்ய இயலாது.
.
எல்லா சத்துக்களையும் எடுத்துக் கொண்டு விளைச்சலைத்தரும் பயிரின் எந்த பகுதியையும் வயலுக்கு சிறிதும் தராத  நமது விவசாயிகள்  பெரும்பாலோனோர்  நுண்ணுாட்டங்களை வயலுக்கு கொடுப்பதே இல்லை
.
எந்த சாகுபடி பயிரும் அனைத்து தேவையான பேரூட்டங்கள் மற்றும் நுண்ணுாட்டங்கள் இல்லாமல் நல்ல மகசூல்தரவோ, தனது ஆயுளை கெளரமாகவும் முடித்துக்கொள்ளவோ இயலாது.
.
மொத்தத்தில் களைகள் நுண்ணுாட்டங்களை சேமிக்கும் ஒரு சேமிப்பு தொட்டியாக இருப்பதுகூட  நமது விவசாயிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிக செலவு செய்து அக்களைகளையும் அழித்து தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment