ஆர்கானிக் சான்றிதழ் பெறும் முறைகள் !!
🌿 இன்று நம் மக்களிடையே இயற்கை விவசாயம் என்ற வார்த்தை மிகவும் பிரபலமடைந்துள்ளது. இயற்கை விவசாய முறையில் உருவாக்கப்பட்ட விளைபொருட்களின் ஆர்கானிக் கடைகளும் தற்போது அதிகம் உருவாகி வருகிறது.🌽 இயற்கை முறையில் பொருள்களை விளைவிப்பதால் விளை பொருட்கள் தரமானதாக இருப்பதுடன், நிலமும் வளமாக மாறுகிறது.
🌾 தமிழ்நாட்டில் பெரும்பாலும் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் விவசாயிகள், அதற்கான சான்றிதழ் பெறுவது இல்லை. இதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் நஞ்சில்லா பொருள்களுக்கும், சந்தையில் கிடைக்கும் நஞ்சான பொருள்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி சிலபேருக்கு தெரிவதில்லை.
🍃 இயற்கை வேளாண்மை என்பது பு மி என்ன கொடுக்கிறதோ அதை எடுத்துக்கொள்வதே ஆகும். அதில் மனிதனின் வேலை விதைப்பதும், அறுவடை செய்வதும் மட்டும்தான்.
🌾 அதே சமயம், ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி செய்யும் விவசாயத்துக்கு தமிழ்நாடு அரசு 'அங்கக வேளாண்மை" என பெயரிட்டுள்ளது.
👉 அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மைக்கான சான்று (ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn) பெற்றிருப்பது அவசியம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விலைபொருட்களை விற்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் இந்த சான்றிதழ் மிகவும் அவசியமானது.
📄 தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (வுயஅடையெனர ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn ழக னுநியசவஅநவெ) நிறுவனம் 'அபீடா" (யுPநுனுயு) என்ற நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
📃 முதலில் அங்கக சான்றிதழ் (ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn) பெற விரும்புவோர், அங்ககச் சான்றளிப்புத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கக வேளாண்மையில் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து பதிவு செய்துகொண்டால், சில ஆய்வுகளுக்குப் பிறகு அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் உங்களுக்கு அளிக்கப்படும்.
📄 அங்ககச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை றறற.வழெஉன.நெவ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
👉 இந்த விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் பண்ணையின் பொது விபரம், பண்ணையின் வரைபடம், மண், பாசனநீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம் (பட்டா, சிட்டா நகல்) பான் கார்டு ஆகிய விவரங்களை மூன்று நகல்களுடன், பதிவுக்கான கட்டணத்தை வரைவோலையாக(னுனு) எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
📃 விண்ணப்பத்தை பரிசீலித்து முறையான ஆய்வுக்குப் பிறகு, தகுதியான நபர்களுக்கு அங்கக விளைபொருள்கள் உற்பத்தியாளர், அங்கக விளைபொருள் பதனிடுவோர் மற்றும் அங்கக விளைபொருள் விற்பனை செய்வோர் என அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.
👉 இதில், ஒவ்வொரு பிரிவினருக்குமான விதிகள் இருக்கின்றன. தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு 2,700 ரூபாயும், தனிநபர் பிற விவசாயிகளுக்கு 3,200 ரூபாயும், குழுப்பதிவுக்கு 7,200 ரூபாயும் சான்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
📄 இதை வங்கி வரைவோலையாக ('னுசைநஉவழச ழக ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn' ஊழiஅடியவழசந) என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
👉 மேலும் விபரங்களுக்கு 0422-2435080 என்ற தொலைபோசி எண்ணிற்கோ அல்லது,
👉 விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர்,
1424 யு, தடாகம் சாலை,
ஜி.சி.டி. போஸ்ட்,
கோயம்புத்தூர் -
No comments:
Post a Comment