Friday, April 13, 2018

களர் நிலம் !!

களர் நிலம் !!

👉 களர் நிலம் என்பது அமிலம் மற்றும் காரத்தன்மை உள்ள நிலமாகும்.

👉 மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது.

👉 களர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும்.

👉 கோடை காலத்தில் மண் இறுகியும், வெண்படிவம் படிந்தது போன்றும், மழை காலங்களில் மண் குழைந்தும் காணப்படும்.

👉 களர் நிலத்தை கண்டறிய முதலில் மண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

👉 அதன் பிறகு மண்ணில் சீர் திருத்த நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

இதை சீர்திருத்தம் செய்வது எப்படி?

👉 களர் நிலத்தை சீர்திருத்துவதற்கு, முக்கியமாக நல்ல தரமான நீர் அவசியம்.

👉 தரமான நீர் இல்லாத சூழ்நிலையில் முடிந்தவரை வடிகால் வசதி செய்து மண்ணின் களர் தன்மைக்கு ஏற்ப பயிர் ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.

👉 களர் நிலத்தை சமன் செய்து சிறு, சிறு பகுதிகளாக பிரித்து முதன்மை மற்றும் கிளை வடிகால்கள் அமைத்து 4 அங்குல உயரத்திற்கு நீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

👉 இந்த நிலத்தை நன்கு ஆழ உழவு செய்து அதில் மண் பரிசோதனைப்படி ஜிப்சம் உப்பை இட்டு மண்ணை நன்கு கலக்க வேண்டும்.

👉 நீர் வடிந்த பின்பு, மீண்டும் நீரைப் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்ய வேண்டும்.

👉 ஆவாரம், வேம்பு அல்லது தக்கை பூண்டு, அகத்தி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்யலாம்.

👉 இத்தைகய நிலங்களை மேலோட்டமாக உழுதல் வேண்டும்.

👉 தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை, வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நான்கு முறை மேலுரமாக பிரித்து இட வேண்டும். இந்த முறைக்கு பிறகு நெல், ராகி போன்ற பயிர்களை பயிரிடலாம்.

👉 யூரியா உரத்திற்கு பதிலாக அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் குளோரைடு போன்ற உரத்தை உபயோகப்படுத்தலாம்.

களர் நிலத்துக்கு ஏற்ற பயிர்கள் :

👉 பருத்தி, மிளகாய், சோளம், கரும்பு, சூரியகாந்தி, நெல், ராகி போன்றவை களரை தாங்கி நன்கு வளரக்கூடிய பயிர்கள் ஆகும்.


கமுதி-கணேஷ்

No comments:

Post a Comment