கூஸ் வாத்துகள் வளர்ப்பு
இவை ஐரோப்பிய நாடுகளை தாயகமாக கொண்டவை. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்தில் வெள்ளை நிற இனங்கள் அதிகமாக வளர்க்க படுகின்றன.
இவை அழகு மற்றும் கறிக்காக வளர்க்கின்றனர். சிலர் ஒரு மாத குஞ்சுகள் வாங்கி வளர்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஆறு முதல் எட்டு மாதத்தில் பருவத்தை எட்டும். அதிக பட்ச எடை ஆறு கிலோ. ஒரு தடவைக்கு பத்து முட்டை வரை இடும்.
இனப்பெருக்கம் தண்ணீர் அடியில் நடைபெறும். சில சமயங்களில் தரையில்.
அடைகாலம் ஒரு மாதம். பெண் வாத்துகள் அடைகாக்கும்.ஆண் வாத்துகள் காவல் காக்கும். அந்த நேரத்தில் தீவனமும் சரியாக உண்ணாது. குஞ்சுகள் வளர்ப்பில் ஆண் வாத்துகளுக்கு அதிக பங்களிப்பு உண்டு.
புல் பூண்டு களை விரும்பி சாப்பிடும். அடர் தீவனமும் கண்டிப்பாக அளிக்க வேண்டும் அதாவது தாது உப்பு கலந்தது.
சில சமயங்களில் நோய்கள் தாக்கு கின்றன.கோழிகளை தாக்கும் நோய்கள் இவற்றை தாக்கும் ஆனாலும் சில சமயங்களில் மட்டுமே. தடுப்பூசி போடுவது சிறப்பு.
நெல் வயல்களில் முளைக்கும் புற்களை இவை சாப்பிடும். அதேசமயம் இளம் பயிர்கள் சேதமாக வாய்ப்பு. பயிர் வளர்ந்த பின்னர் விடலாம்.
இவை வளரும் பண்ணைகளில் புதிய ஆட்கள் நுழைந்தால் பெரிதாக சப்தம் எழுப்பும் சில சமயங்களில் கொத்த வரும். மனிதர்கள் அசைவை நன்கு புரிந்து கொள்ளும்.
நெல் போன்ற தானியங்களை விரும்பும். அறுவடை செய்யும் நெல் வயல்களில் சிந்தும் மணிகளை தேடி உண்ணும்.

No comments:
Post a Comment