Friday, April 13, 2018

வீட்டிற்குள் பாம்பு,பூரான் நுழையாமல் இருக்க

வீட்டிற்குள் பாம்பு,பூரான் நுழையாமல் இருக்க...!

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களில் பாம்புகள் எளிதாக குடிபுகும். நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்களை கடித்துவிடும். இதனால் அவை உயிருக்கே ஆபத்தாகிவிடும். வீட்டு தோட்டத்தில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் குடிபுகாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் கூறும் அறிவுரைகளை படியுங்களேன்.

தோட்டத்தில் புதர்போல செடிகள் இருந்தால்தான் பாம்பு, தேள், பூரான் போன் விஷ ஜந்துகள் குடி புகும். எனவே புதர் செடிகளை வெட்டிவிடுவங்கள். அதிக அளவில் இலை, தலைகளையும், காய்ந்த சருகுகளையும் குவித்து வைக்காமல் அவ்வப்போது அகற்றுங்கள்.

தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில்தான் பாம்புகள் குடிபுகும் எனவே சுத்தமாக தோட்டத்தை பராமரியுங்கள். அதேபோல் மரப்பொந்துகள், உடைந்த ஓடுகள் போன்றவைகளை குவித்து வைத்திருந்தாலும் அவை பாம்புகளுக்கு பிடித்தமான இடமாகிவிடும். எனவே முடிந்த வரை உடைந்து போன பொருட்களை தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள்.

தோட்டத்தில் அதிக அளவில் புற்கள் இருந்தால் அங்கு பூச்சிகள், புழுக்கள் வளரும் எனவே தோட்டத்தில் புற்களை ஒரே சீராக வெட்டி விடவும். அதேபோல் ஒரே இடத்தில் ரோஜாச் செடிகளை புதர்போல வளர்ப்பதையும் தவிர்க்கவும்.

பாம்புகளுக்கு பூண்டு வாசனை அலர்ஜி எனவே பூண்டினை நசுக்கி தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது கரைத்து விடலாம்.

தோட்டத்தின் மூளையில் புதினா செடிகளை வளர்க்கலாம். ஏனெனில் புதினா வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது என்பதால் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வர வாய்ப்பே இல்லை என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.

பேபி ஷாம்புவை தண்ணீரில் கலந்து அதனை தோட்டத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம். மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் செடிகளின் மீது தண்ணீர் தெளித்து விடலாம். இந்த வாசனை பாம்புகளுக்கு பிடிக்காது எனவே தோட்டத்தில் பாம்புகள் இருந்தாலும் அவை ஓடிவிடும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் உங்கள் தோட்டத்தில் அச்சமின்றி பொழுதை கழிக்கலாம்.

Thanks to One India.com


பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . .
உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு. . . .
வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம். . . .
நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா. . . .
அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட ...

பாம்பு சீராது ,
கடிக்காது,
ஓடாது ;
அங்கேயே மயங்கி கிடக்கும்.!!

No comments:

Post a Comment