நாட்டு மாடுகளை வளர்ப்போம்!
மேய்ச்சல் நிலம் தேடி மாடுகள் மந்தையாக செல்லும் காட்சி அற்புதமானது. இன்று மேய்ச்சல் நிலமும் இல்லை, மேய்ப்பவர்களும் இல்லை. ஏன், மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற நாட்டு மாடுகளும் இல்லை என்பதுதான் வேதனை. ஆம் தமிழகத்தை சேர்ந்த பல நாட்டு மாடுகளின் இனங்கள் அழியும் தருவாயில் உள்ளது.
மேலும், காங்கேயம் ,கிர் ..போன்ற நாட்டு பசுக்களும் அறிதாகி ஜெர்சி எனும் சீமைப் பசுக்களே எங்கு காணினும் இருக்கிறது. ஆனால் சின்னமனூர், கூடலூர், வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் காணப்படும் ‘சித்து’ மாடுகள், ‘அழிந்து போனவை’ என்று அரசுக் குறிப்பில் குறிப்பிட்டு, உயிரோடு புதைத்துள்ளதாக சொல்கிறார் இயற்கை வேளாண் அறிஞர் திரு. எஸ். நாராயணன்.
நாட்டு மாடுகளின் சாணம் அதிக உரச்சத்து கொண்டது. அதனாலேயே உழவர்கள் இரவு நேரங்களில் வயல்களில் ‘கிடை’ சாத்துகின்றனர். அதனாலேயே இவைகள் கிடைமாடுகள் என்றோம். 3 அல்லது 4 முறை கூட கிடை சாத்துவதினால் கிடைக்கும்உரஅளவை டி.ஏ.பி. மற்றும் யூரியாவினால் கூட தர முடியாது என்பதே உண்மை.
ஆனால், கலப்பின பசு கொடுக்கும் எரு சத்தில்லாதது. அதனால் கலப்பின பசுக்களால் நமது வேளாண்மைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தற்சார்போடு இருந்த நமது வேளாண்மை, எரு பற்றாக்குறையால், இரசாயன உரத்திற்கு மாறியது. இதனால் நமது வேளாண் விளை நிலங்கள் மலடாகிக் போனதுதான் மிச்சம். தற் போது, அந்த இரசாயன உரத்திற் கும் நம் தமிழகம் கையேந்தி நிற்கிறது.
எந்த மாடு இருந்தால் எனக்கென்ன?
உழவுக்கு ட்ராக்டர் இருக்கிறது. எருவுக்கு பதில் உரம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, குறைவான பால் கொடுக் கும், நாட்டு மாடுகள் எதற்கு? அறிவியல் வளர நாமும் வளர வேண்டாமா? குடம் குடமாய் பாலை கொட்டும் பசுவே போது மானது என்று வெண்மைப் புரட்சிக்கும், பசுமைப் புரட்சிக்கும் சிலர் வக்காலத்து வாங்கலாம். ஆனால், இந்த கலப்பின பசுவும் அதன் பாலும் நம் உடலுக்கு நல்லதா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
கலப்பின மாடுகளும் கண்ணுக்குத் தெரியாத செய்தியும்.??
கலப்பின மாடுகளின் பாலில் நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் உள்ளது. நாட்டு மாடுகளின் பாலின் A2 புரதம் உள்ளது. இது உடலுக் குத் தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது என்கி றார் பேராசிரியர் பாப் எலியாட்.
நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும், திமிலும் இருப்பதால் பசுவின் வெப்பம் இவற்றின் வழியாகவே வெளியேறுகிறது. அதனால் நாட்டு மாடுகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும், சாணம் மற்றும் பசுவின் சிறுநீர் ஊட்டம் பெற்ற உரமாகவும் மாறுகிறது.
அதுமட்டுமின்றி, இதன் சாணம் மற்றும் சிறுநீர் கிருமிநாசினியாக வும் பயன்படுகிறது. நாட்டு மாடு களின் சாணத்தில் இருந்து தயாரிக் கப்பட்ட திருநீரு உடலின் பித் தத்தை அப்படியே எடுத்துவிடும் சிறப்பு மிகுந்தது.
பால் அல்ல.. மாடே கலப்புதான்!
கலப்பின மாடுகளுக்கு, பெண் களின் பெண்மையை தூண்டக் கூடிய ஹார்மோன் அதிகமாக இருப்பதால், பால் அதிகமாக சுரக்கி றது. இந்த ஹார்மோன் கலப்பின பசுக்களின் மரபணுவி லேயே இருப்பதால், கலப்பின பசுவின் பாலை குடிக்கும் ஆண் களுக்கு, பெண்ணுக்குரிய உணர்வுகள் அதிகமாக தூண்டப் படுவதோடு, மந்த செயல் பாடும், மந்தமான பாலியல் உணர் வுகளும் ஆண்களுக்கு ஏற்படுகிறது.
இவ்வாறான ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஆண்களில் ஏழில் ஒருவருக்கு மலட்டுத் தன்மை ஏற்படு கிறது.கலப்பின மாடுகளின் பாலை அருந்தும் பெண்களுக்கு, பெண் மைக்குரிய ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்,அதித பாலியல் உணர்ச்சிப் பெருக்கு, மாதவிடாய் பிரச்சினைகள் போன் றவை ஏற்படுகின்றன.
தற்போது, விவரம் தெரியாத 10 (அ) 11 அகவையிலேயே பெண் பிள்ளை கள் பருவமடைந்து விடுகின்றனர். சிறு அகவையிலேயே பெண்களுக்கு ஆரம்பமாகும் மாத விலக்கு, நடுத்தர அகவையிலேயே நின்று விடுகிறது. அதேபோல் தாய்மார் களுக்குக் குறைந்த நாட்களிலேயே பால்சுரப்பு நின்று விடுகிறது.
‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு
இன்சுலின் கண்டிப்பாக போட்டே ஆக வேண்டும்’ என்று ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் பாப் எலியாட் வலி யுறுத்துகிறார்.
இந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியுசிலாந்தின் ‘சமோன்’ மலைவாழ் மக்களிடையே ஆராய்ச்சி செய்த போது, அவர்கள் பால் அதிகமாக குடிப்பதாகவும், அந்த பாலில் A1 புரதம் இருந்த தால் அந்தக் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், A2 புரதப்பாலை அருந்திய குழந் தைகளுக்கு இந்த சிக்கல் வருவ தில்லை என்றும் கண்டுபிடித்தார்.
கலப்பு இன பசுக்களின் பால் உடல் நலனுக்குக் கேடானது மட்டு மல்ல மன நலனுக்கு மிகக் கேடானது. இந்த கலப்பின பசுக் களின் பால் மெதுவாக நம் உடலில் நஞ்சு ஏற்றுகிறது. இதனை நாம் இங்கே பச்சை, நீலம் ,ஆரஞ்சு என கலப்பு இன பாலை (A1) கலர்கலராக பாக்கெட் டுகளில் பிரித்து விற்பதை உடல் நலனுக்கு உகந்தது என வாங்கி அருந்துகிறோம்.
பால் கலப்படம் பற்றி பேசும்போது, நாட்டுப் பசும்பால (A2) மற்றும் கலப்பினப் பசும்பால்(A1)
பற்றி பேசவது இல்லை
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் பாலில்
நல்ல கலப்பு இன பால் கிடைப்பதே அரிதாக இருக்கும் போது, இதில் நாட்டு மாட்டுப் பாலை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்கலாம். ஆனால், வெளி நாடுகளில் கூட A2 புரதப் பாலுக்கு மாறி வரும் போது, நாம் ஏன் மாற முடி யாது?
மனம் உண்டானால் எல்லா வற்றிற்கும் வழிஉண்டு!
கென்யா நாட்டின், மாடுகளில் பாலில் நூறு விழுக்காடு A2 புரதம் இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளில் 50:50A1 மற்றும் A2 புரதப் பால் இருக்கிறது. A2 புரதப் பாலுக்கு என்றே தனியாக நிறுவனங்கள் தொடங்கி பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.
வட அமெரிக்காவில் 50 விழுக் காடாக இருக்கும் A1 புரதப் பாலை கொடுக்கும் மாடுகளை, A2 புரதப் பால் கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.
நாடு கடத்தப்பட்ட நாட்டு மாடுகள்..??
உலகமே A2 புரதப் பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகள் பக்கம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ள இந்த நிலையில், A1 மற்றும் A2 என்றால் என்னவென்று கேட்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம்.
நாட்டு மாடுகள் இருந்தவரை நாம் பொருளாதாரத்தில் தற்சார்பு பெற்றி ருந்தோம். ஆனால், இன்று உலகமய சிக்கலில் நம் இனமோ அல்லது அதற்கான அடிச்சுவடோ இல்லாத அளவிற்கு, நமது அனைத்து தற்சார்புகளையும் நாம் இழந்து நிற்கிறோம்.
இயற்கையான கருவூட்டலில் தன் இனத்தைப் பெருக்கிய நம் நாட்டு மாடுகள், இன்று செயற்கை கருவூட்டலினால் சரியாக சினை பிடிக்காமல் சிக்கலில் தவித்து வருகின்றன. காரணம் செயற்கை கருவூட்டலில் இருக்கும் விந்தணு கலப்பின் காளை விந்தணு.
இந்த கலப்பின காளையின் விந்தணுவும் நாட்டு மாடுகளின் கருமுட்டையும் சரியாக இணை சேர முடியாததால், தன் இனத்தைப் பெருக்க முடியா மல், மாமிசதிற்கு ஏற்றுமதியாகிறது என்பதே உண்மை. இதில் தப்பிப் பிழைத்த நாட்டு மாடுகளும், குறைவாகவே பால் கறப்பதால், இருக்கும் சில நாட்டு மாடுகளும் இன்று மாமிசதிற்கு ஏற்றுமதியாகிறது.
மஞ்சு விரட்டு - எருது விரட்டு மற்றும் ஏறு தழுவலுக்காக (ஜல்லிக்கட்டு) வளர்க்கப்பட்ட காளைகள், இனப்பெருக்கத் திற்காகவும் பயன் பட்டதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் நாட்டு மாட்டினங்களை ஒழிப்பதற்காக, மேற்கண்ட வீர விளையாட்டு களுக்கு, விலங்குகள் நல அமைப் பினர் ஏற்படுத்தியத் தடையால், தமிழனின் வீர விளையாட்டுகள் அழிந்தது. ஆம் அதற்காக வளர்க்கப்பட்ட காளைகள் கறிக்காக ஏற்று மதியாகிறது. இதனால் நாட்டு மாடுகள் இனமான தமிழ்நாட்டு இன பசுக்கள் மற்றும் எருதுகளும் அழிந்து வருகிறது என்பதே உண்மை.
தமிழர் இனம் நோயற்ற இனமாக காக்கப்பட வேண்டும். அதற்குத் தேவை A2புரதப்பால். இந்த பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகளை வளர்ப்போம். இந்த நாட்டு மாடுகளை வளர்க்கும் உழவர்களை ஆதரிப்போம். இதன் மூலம் நம் தமிழர் இனம் நோயற்ற இனமாகக் காக்கப்படும்.
எழுத்தாளர்: யாழ் இனியன்.
தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு பகிர்வு:
No comments:
Post a Comment