Friday, April 13, 2018

ஆடு கோழி வளர்ப்பு




ஆடு கோழி வளர்ப்பில் புதிய கட்டமைப்பு மற்றும் வருவாய் பெருக்கும் நடைமுறைகள்

https://www.youtube.com/watch?v=CHvwLRtkBgE

ஆடு வளர்ப்பும்... நாட்டுக்கோழி வளர்ப்பும்

https://www.youtube.com/watch?v=a2VYePT0ocs

ஆடு வளர்ப்பு முறை

https://www.youtube.com/watch?v=E7CmVGktulA

ஆடு வளர்ப்பில் லாபம் வளர்பு

https://www.youtube.com/watch?v=DBQcc6jHkVw

ஆடு வளர்ப்பு 1

https://www.youtube.com/watch?v=1xd4n2o-77Y

https://www.youtube.com/watch?v=JD4YTAWAWW8

https://www.youtube.com/watch?v=9MsV7twvr6o

https://www.youtube.com/watch?v=gdD7eYSHVkk

https://www.youtube.com/watch?v=TanN_P_LC0U

https://www.youtube.com/watch?v=gKC-9Z5vbL0

இயற்கை முறை கத்திரி சாகுபடி:

இயற்கை முறை கத்திரி சாகுபடி




சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.

இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும்.

காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங் காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.

நாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும்.

நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி).

நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும்.

செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும்.இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது.

இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும்.

இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகø சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம்.

விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன.

மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும்.

ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லாபம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.

ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது

இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது.

சத்துக்களின் அமைச்சரவை

நாங்களும் அமைச்சர்கள் தான்



பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்


பயிரின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. அனைத்து சத்துக்களும் மண்ணில் வெவ்வேறு அளவு உள்ளன.நம் மண்ணில் இவ்வகை சத்துக்கள் பயிரின் தேவையை விட குறைவாக இருந்தால் அவற்றை உரங்கள் மூலம் பயிருக்கு அளிக்கின்றோம். பயிருக்கு தேவையான சத்துகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை

மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)- கார்பன், ஹைடிரஜன், ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.

அதிகம் தேவைபடுபவை(Major Nutrient)-தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)

சிறிதளவு அதிகம் தேவைபடுபவை(Micro Nutrient)- கால்சியம் (Calcium), மெக்னீசியம் (magnisium), சல்பர் (sulfur)

குறைவான அளவு தேவைபடுபவை(Secondary Nutrient): இரும்பு சத்து(Fe), மாங்கனீசு(Mn), துத்தநாகம்(Zn), குளோரின்(Cl), போரான்(B), கோபால்ட்(Co), நிக்கல்(Ni)  மற்றயவை.

பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது.

பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.

சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்


தழை சத்து - அரசன் (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)

மணி சத்து -ராணி (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)

சாம்பல் சத்து- போகுவரத்து துறை அமைச்சர்( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )

கால்சியம்- பாதுகாப்பு துறை அமைச்சர்(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )

மக்னீசியம்- உள்துறை அமைச்சர்(பச்சயம் தயாரிப்பு - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )

சல்பர்- பெட்ரோலிய துறை அமைச்சர்(எண்ணை உற்பத்தி)

துத்தநாகம்- தழை சத்தின் செக்ரட்டரி(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது


இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை


தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட
வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும்
குறைவு. அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்) ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.

இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ
கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி
விடும்.

இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.

இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய
இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும்
ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.

இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம்.

இயற்கை எருக்கள்

முக்கிய இயற்கை எருக்கள் - (IMPORTANT NATURAL MANURES)


1. கோழி எரு

மற்ற இயற்கை உரங்களை ஒப்பிடும்போது இது கூடுதலான சத்துக்களைக் கொண்டது.ஆழ்கூள முறையில் சேகரிக்கும் கோழி எருக்கள் இன்னும் சிறப்பானவை.அதில் உள்ள சத்துக்கள் விவரம்.தழைச்சத்து: 3.03 சதம்.மணிச்சத்து: 2.63 சதம்.சாம்பல் சத்து 1.40 சதம். மக்காத புதிய கோழி எருக்களை பயிருக்கு போடக் கூடாது.அல்லது 4 மாதங்கள் நன்கு மக்கிய பிறகே போட வேண்டும்.

2.பிண்ணாக்கு வகைகள்

எண்ணெய்வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையின் பெயர் பிண்ணாக்கு. சாப்பிடக் கூடியவை, சாப்பிடக் கூடாதவை என இரண்டு வகை இதில் உண்டு.இரண்டையுமே பிண்ணாக்காக பயன்படுத்தலாம்.பிண்ணாக்கின் விலை ஆனைவலை குதிரைவிலை ஆகிவிட்டதால் இதனை உபயோகிப்பதில் சிரமம் உள்ளது.பொதுவாக பிண்ணாக்குகளில் கீழ்கண்ட அளவில் சத்துக்கள் உள்ளன.தழைச்சத்து: 2.5 முதல் 7.5 சதம் வரை மணிச்சத்து: 0.8 முதல்  4.0 சதம் வரை.சாம்பல் சத்து: 1.2 முதல் 2.2 சதம் வரை.3. மக்கு உரம் அல்லது கம்போஸ்ட் உரம்
முறையாக மக்க வைத்த அங்கக உரத்தின் பெயர் கம்போஸ்ட் மக்க வைக்கும் பொருட்களுக்கு ஏற்ப சத்துக்கள் வேறுபடும்.எல்லா இயற்கை எருக்களைப் போலவும் இது பயிர்களுக்கு தாய்ப்பால் மாதிரி.தாவரக் கழிவுகள், கால்நடைகக் கழிவுகள், மனிதக் கழிவுகள், கிராமக் குப்பை, நகரக் குப்பை, இப்படி எல்லாவற்றையும் மக்கவைக்கலாம்.மக்கவைத்து இயற்கை உரமாக மாற்றலாம்.அங்ககப் பொருட்களை மக்க வைக்க சில நுண்ணுயிர்களும், பேருயிர்களும் முக்கிய பங்காற்றுகின்றன.மண்புழுக்கள், சாணக்கரைசல், அமுதக்கரைசல், புளுரோட்டஸ் காளான் வித்துக்கள், இ.எம். நுண்ணுயிர்க்கரைசல் ஆகியவை மகத்தான உதவி செய்கின்றன மக்கு உரம் தயாரிக்க.மக்கு உரங்களை எல்லா பயிர்களுக்கும் இடலாம்.மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு உரம் போன்றவை அனைத்தும் இந்த வகைகளே

பயிர்பாதுகாப்பு செய்ய உதவும் சீத்தா

பயிர்பாதுகாப்பு செய்ய உதவும் சீத்தா (PEST CONTROL BY CUSTARD APPLE)



 மானாவாரி நிலங்களில் தானாக வளர்ந்து கனி கொடுக்கும் சிறு பழமரம். இதன் இலை, விதை, முற்றாக் கனி, மற்றும் வேர்களை பல நாடுகளில் பூச்சிக் கொல்லிகளாக பயன்படுத்துகிறார்கள். பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலும், மனிதர்களுக்கோ நன்மை செய்யும் பூச்சிகளுக்கோ தீங்கு செய்வதில்லை.

3.1. இலைவடிநீர் அல்லது கஷாயம் (LEAF EXTRACT)

50 கிராம் சீத்தா இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி அத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசலை நன்கு கலக்கி பயிரில் தெளிக்கலாம்.3.2. விதைக்கரைசல் (SEED SOLUTION)
100 கிராம் ஓடு நீக்காத விதைகளை நன்கு பொடித்து 1 லிட்டர் நீரில் கலந்து ஒரு இரவு முழுக்க ஊற வைத்து அடுத்த நாள் காலையில் விதைக் கரைசலை வடிகட்டி இத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசல்  கலந்து  பயன்படுத்தலாம்.3.3. எண்ணெய்க்கரைசல் (OIL SOLUTION)

சீத்தா விதைஎண்ணெய் 30 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீரை கலந்து அத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசலைக் கலந்து பயிருக்குத் தெளிக்கலாம்3.4. இதர பூச்சிகள் (OTHER PESTS)
முட்டைக்கோசுப்புழு, புரோடீனியாபுழு, தானியத்தை சேதப்படுத்தும் வண்டுகள், பயறுகளைத் துளைக்கும் வண்டுகள், பருத்தியில் பஞ்சினை தாக்கும் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாவில் உள்ளன.சீத்தா இலை, முற்றாதகனி. விதை, எண்ணெய், மற்றும் வேரில் உள்ளவை தொடு நஞ்சாகவும், குடல் நஞ்சாகவும் செயல்பட்டு பூச்சிகளை அழிக்கின்றன.

 ராம்சீத்தா :

ராம்சீத்தா இலைகளில் பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் சக்தி நிரம்ப உள்ளது.இதன் விதைகள் , விதை எண்ணெய், முற்றாத காய்கள், அனைத்தும் சீத்தாவைப் போலவே பூச்சிகளைக் கொல்லும் திறன் கொண்டவை.ராம்சீத்தாவின் முற்றாத காய்களிலும், பூச்சிக் கொல்லியின் சக்தி உள்ளது.புகையிலைக்கு சமமானதொரு நஞ்சினை உடையது ராம்சீத்தாவின் விதைகள்.

விதைத்தூள் (SEED POWDER)

ராம்சீத்தாவின் விதைகளை பொடி செய்து தூவுவதன் மூலம் அசுவணிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.இதன் எண்ணெய்க் கரைசலை தெளித்து நெல் புகையான் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம்.

 இளங்காய்கள்

இலை மற்றும் இளம் காய்களை நசுக்கி நீர்விட்டு அரைத்து சாற்றினை எடுத்து தெளித்து பரவலாக பலவிதமான பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

பீஜாமிர்தம் (Beejamrutha)


பீஜாமிர்தம் என்றால் என்ன.?


🌴விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.

தயாரிக்க தேவையான பொருட்கள்


🔹தண்ணீர் 20 லிட்டர்

🔸பசு மாட்டு சாணம் 5 கிலோ

🔹பசு மாட்டு கோமியம் 5 லிட்டர்

🔸சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்

🔹ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு

பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை


🌴முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும். பின்னர் இந்த கலவையை மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இக்கலவையே பீஜாமிர்தம்மாகும்.

🌴முதல் நாள் மாலையில் கலந்து வைத்தால் அடுத்த நாள் காலையில் இதை விதைகளின் மேல் தெளிக்கலாம்.

பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது..?


🌴விதை நேர்த்தி செய்ய வேண்டிய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

🌴நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை இந்த கரைசலில் நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

விதை நெல்லை எவ்வாறு நேர்த்திசெய்வது..?


🌴10 லீட்டர் தண்ணிரில் 1 கிலோ கல்லுப்பை கரைத்து, அதில் 10 கிலோ விதை நெல்லை இடவேண்டும். தண்ணிரில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய நெல்லை மட்டும் எடுத்து நீரில் அலசி, அதிலிருந்து 9 கிலோ நெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌴பின்னர் பிஜாமிர்தத்தில் 2 மணிநேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
அடுத்து சணல் சாக்கில் நெல்லை கொட்டி மூட்டையாகக் கட்டி 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அதன்பின் 24 மணிநேரம் இருட்டில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

🌴இந்த விதைகளை நாற்றங்காலில் தூவி, விதைகள் வளர்ந்து 25 முதல் 30 நாட்களில் நாற்றானதும் அவற்றை எடுத்து வயலில் நடுகிறோம்.

🌴நெல் நாற்றுகளை வயலில் நட்ட பிறகு, முதல் நீர் பாய்ச்சும்போது ஜீவாமிர்தம் என்னும் மற்றொரு கலவையை சேர்த்துப் பாய்ச்ச வேண்டும்.

பீஜாமிர்த்தின் நன்மைகள்


வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தாக்குதள் தடுக்கப்படும்
எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை

வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு

வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு


பயிர் களை நோய்த் தாக்குதலில் இருந்து காத்திடவும், சுற்றுப்புறச் சூழலை மாசில் இருந்து பாதுகாத்திடவும் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்

வேம்பின் அனைத்து பாகங்களும் பலன் தரும்.

வேப்பந்தழையை உரமாகவும், பூச்சி மருந்தாகவும், வேப்பவித்துக் கரைசலை பூச்சிக்கொல்லியாகவும்,
வேப்ப எண்ணெயை தனியாகவும் பூச்சி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0%  அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம்.
வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிடும்.

உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.

10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான், இலைச்சுருட்டுப் புழு, ஆணைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படும்.

3 லிட்டர் வேப்பெண்ணெய் உடன் 200 மில்லி ஒட்டும் திரவம் அல்லது காதி துணி சோப் நன்றாகக் கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச்சத்து 1.1% , சாம்பல் சத்து 1.5%  உள்ளன.  நீண்ட நாட்கள் கிடைக்க உதவும். தழைச்சத்து வீணாவதும் குறையும்.

நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்த பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் அளவில் தெளித்து நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப் புழு, மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

நொச்சி மற்றும் வேப்பந்தழையினை அரைக்க வசதியுள்ள இடங்களில் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
வேம்பில் அசாடிரக்டின், நிம்பிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி  நோய் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றனர்.


கடைகளில் கிடைக்கும் வேப்பெண்ணை இரும்பு செக்கில் அரைக்கப்படுவதினால், வெப்பத்தினால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன,

 இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகள் இருக்கவேண்டிய வேப்பெண்ணெயில்

 8 வகையான ஆல்கலாய்டுகள் மட்டுமே உள்ளன. இதனால் வேப்பெண்ணையை பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை சேகரித்து அதை இடித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது,


 இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகளும் முழுமையாகக் கிடைக்கிறது. வேப்பங்கொட்டைக் கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, வேப்பங்கொட்டைக் கரைசல் பயிர்களின் மேல் படிகிறது. பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டைக் கரைசல் நல்ல தீர்வாக உள்ளது.

பூச்சிக்கட்டுப்பாடு 


1. வேம்பின் வாசனை பூச்சிகளை விரட்டும்.

2. வேம்பின் கசப்புச் சுவையால் பூச்சிகள் பயிரை சாப்பிடாது.

 3. கசப்புச் சுவையையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது.

 4. தொடர்ந்து உண்ணும் பொழுது பூச்சிகளுக்குப் பக்கவாதம் ஏற்பட்டு அவை இறந்துவிடுகிறது.

 5. இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு, இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலையை அடைகின்றன.

 6. பெண் பூச்சிகளின் முட்டை உற்பத்தியும், முட்டையிடுதலும் தவிர்க்கப்படுகிறது.

நாட்டு மாடுகளை வளர்ப்போம்!

நாட்டு மாடுகளை வளர்ப்போம்!


மேய்ச்சல் நிலம் தேடி மாடுகள் மந்தையாக செல்லும் காட்சி அற்புதமானது. இன்று மேய்ச்சல் நிலமும் இல்லை, மேய்ப்பவர்களும் இல்லை. ஏன், மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற நாட்டு மாடுகளும் இல்லை என்பதுதான் வேதனை. ஆம் தமிழகத்தை சேர்ந்த பல நாட்டு மாடுகளின் இனங்கள் அழியும் தருவாயில் உள்ளது.

மேலும், காங்கேயம் ,கிர் ..போன்ற நாட்டு பசுக்களும் அறிதாகி   ஜெர்சி எனும் சீமைப் பசுக்களே எங்கு காணினும் இருக்கிறது. ஆனால் சின்னமனூர், கூடலூர், வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் காணப்படும் ‘சித்து’ மாடுகள், ‘அழிந்து போனவை’ என்று அரசுக் குறிப்பில் குறிப்பிட்டு, உயிரோடு புதைத்துள்ளதாக சொல்கிறார் இயற்கை வேளாண் அறிஞர் திரு. எஸ். நாராயணன்.

நாட்டு மாடுகளின் சாணம் அதிக உரச்சத்து கொண்டது. அதனாலேயே உழவர்கள் இரவு நேரங்களில் வயல்களில் ‘கிடை’ சாத்துகின்றனர். அதனாலேயே இவைகள் கிடைமாடுகள்  என்றோம். 3 அல்லது 4 முறை கூட கிடை சாத்துவதினால் கிடைக்கும்உரஅளவை டி.ஏ.பி. மற்றும் யூரியாவினால் கூட தர முடியாது என்பதே உண்மை.

ஆனால், கலப்பின பசு கொடுக்கும் எரு சத்தில்லாதது. அதனால் கலப்பின பசுக்களால் நமது வேளாண்மைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தற்சார்போடு இருந்த நமது வேளாண்மை, எரு பற்றாக்குறையால், இரசாயன உரத்திற்கு மாறியது. இதனால் நமது வேளாண் விளை நிலங்கள் மலடாகிக் போனதுதான் மிச்சம். தற் போது, அந்த இரசாயன உரத்திற் கும் நம் தமிழகம் கையேந்தி நிற்கிறது.

எந்த மாடு இருந்தால் எனக்கென்ன?


உழவுக்கு ட்ராக்டர் இருக்கிறது. எருவுக்கு பதில் உரம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, குறைவான பால் கொடுக் கும், நாட்டு மாடுகள் எதற்கு? அறிவியல் வளர நாமும் வளர வேண்டாமா? குடம் குடமாய் பாலை கொட்டும் பசுவே போது மானது என்று வெண்மைப் புரட்சிக்கும், பசுமைப் புரட்சிக்கும் சிலர் வக்காலத்து வாங்கலாம். ஆனால், இந்த கலப்பின பசுவும் அதன் பாலும் நம் உடலுக்கு நல்லதா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

கலப்பின மாடுகளும் கண்ணுக்குத் தெரியாத செய்தியும்.??


கலப்பின மாடுகளின் பாலில் நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் உள்ளது. நாட்டு மாடுகளின் பாலின் A2 புரதம் உள்ளது. இது உடலுக் குத் தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது என்கி றார் பேராசிரியர் பாப் எலியாட்.

நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும், திமிலும் இருப்பதால் பசுவின் வெப்பம் இவற்றின் வழியாகவே வெளியேறுகிறது. அதனால் நாட்டு மாடுகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும், சாணம் மற்றும் பசுவின் சிறுநீர் ஊட்டம் பெற்ற உரமாகவும் மாறுகிறது.

அதுமட்டுமின்றி, இதன் சாணம் மற்றும் சிறுநீர் கிருமிநாசினியாக வும் பயன்படுகிறது. நாட்டு மாடு களின் சாணத்தில் இருந்து தயாரிக் கப்பட்ட திருநீரு உடலின் பித் தத்தை அப்படியே எடுத்துவிடும் சிறப்பு மிகுந்தது.

பால் அல்ல.. மாடே கலப்புதான்!


கலப்பின மாடுகளுக்கு, பெண் களின் பெண்மையை தூண்டக் கூடிய ஹார்மோன் அதிகமாக இருப்பதால், பால் அதிகமாக சுரக்கி றது. இந்த ஹார்மோன் கலப்பின பசுக்களின் மரபணுவி லேயே இருப்பதால், கலப்பின பசுவின் பாலை குடிக்கும் ஆண் களுக்கு, பெண்ணுக்குரிய உணர்வுகள் அதிகமாக தூண்டப் படுவதோடு, மந்த செயல் பாடும், மந்தமான பாலியல் உணர் வுகளும் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

இவ்வாறான ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஆண்களில் ஏழில் ஒருவருக்கு மலட்டுத் தன்மை ஏற்படு கிறது.கலப்பின மாடுகளின் பாலை அருந்தும் பெண்களுக்கு, பெண் மைக்குரிய ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்,அதித பாலியல் உணர்ச்சிப் பெருக்கு, மாதவிடாய் பிரச்சினைகள் போன் றவை ஏற்படுகின்றன.


தற்போது, விவரம் தெரியாத 10 (அ) 11 அகவையிலேயே பெண் பிள்ளை கள் பருவமடைந்து விடுகின்றனர். சிறு அகவையிலேயே பெண்களுக்கு ஆரம்பமாகும் மாத விலக்கு, நடுத்தர அகவையிலேயே நின்று விடுகிறது. அதேபோல் தாய்மார் களுக்குக் குறைந்த நாட்களிலேயே பால்சுரப்பு நின்று விடுகிறது.

‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு
இன்சுலின் கண்டிப்பாக போட்டே ஆக வேண்டும்’ என்று ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் பாப் எலியாட் வலி யுறுத்துகிறார்.
இந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியுசிலாந்தின் ‘சமோன்’ மலைவாழ் மக்களிடையே ஆராய்ச்சி செய்த போது, அவர்கள் பால் அதிகமாக குடிப்பதாகவும், அந்த பாலில் A1 புரதம் இருந்த தால் அந்தக் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், A2 புரதப்பாலை அருந்திய குழந் தைகளுக்கு இந்த சிக்கல் வருவ தில்லை என்றும் கண்டுபிடித்தார்.

கலப்பு இன பசுக்களின் பால் உடல் நலனுக்குக் கேடானது மட்டு மல்ல மன நலனுக்கு மிகக் கேடானது. இந்த கலப்பின பசுக் களின் பால் மெதுவாக நம் உடலில் நஞ்சு ஏற்றுகிறது. இதனை  நாம் இங்கே பச்சை, நீலம் ,ஆரஞ்சு என கலப்பு இன பாலை  (A1) கலர்கலராக  பாக்கெட் டுகளில் பிரித்து விற்பதை உடல் நலனுக்கு உகந்தது என வாங்கி அருந்துகிறோம்.

 பால் கலப்படம் பற்றி பேசும்போது, நாட்டுப் பசும்பால (A2) மற்றும் கலப்பினப் பசும்பால்(A1)
பற்றி பேசவது இல்லை
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் பாலில்
நல்ல கலப்பு இன பால் கிடைப்பதே அரிதாக இருக்கும் போது, இதில் நாட்டு மாட்டுப் பாலை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்கலாம். ஆனால், வெளி நாடுகளில் கூட  A2 புரதப் பாலுக்கு மாறி வரும் போது, நாம் ஏன் மாற முடி யாது?
மனம் உண்டானால் எல்லா வற்றிற்கும் வழிஉண்டு!

கென்யா நாட்டின், மாடுகளில் பாலில் நூறு விழுக்காடு A2 புரதம் இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளில் 50:50A1 மற்றும் A2 புரதப் பால் இருக்கிறது. A2 புரதப் பாலுக்கு என்றே தனியாக நிறுவனங்கள் தொடங்கி பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.

வட அமெரிக்காவில் 50 விழுக் காடாக இருக்கும் A1 புரதப் பாலை கொடுக்கும் மாடுகளை, A2 புரதப் பால் கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.

நாடு கடத்தப்பட்ட நாட்டு மாடுகள்..??


உலகமே A2 புரதப் பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகள் பக்கம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ள இந்த நிலையில், A1 மற்றும் A2 என்றால் என்னவென்று கேட்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

நாட்டு மாடுகள் இருந்தவரை நாம் பொருளாதாரத்தில் தற்சார்பு பெற்றி ருந்தோம். ஆனால், இன்று உலகமய சிக்கலில் நம் இனமோ அல்லது அதற்கான அடிச்சுவடோ இல்லாத அளவிற்கு, நமது அனைத்து தற்சார்புகளையும் நாம் இழந்து நிற்கிறோம்.

இயற்கையான கருவூட்டலில் தன் இனத்தைப் பெருக்கிய நம் நாட்டு மாடுகள், இன்று செயற்கை கருவூட்டலினால் சரியாக சினை பிடிக்காமல் சிக்கலில் தவித்து வருகின்றன. காரணம் செயற்கை கருவூட்டலில் இருக்கும் விந்தணு கலப்பின் காளை விந்தணு.

இந்த கலப்பின காளையின் விந்தணுவும் நாட்டு மாடுகளின் கருமுட்டையும் சரியாக இணை சேர முடியாததால், தன் இனத்தைப் பெருக்க முடியா மல், மாமிசதிற்கு ஏற்றுமதியாகிறது என்பதே உண்மை. இதில் தப்பிப் பிழைத்த நாட்டு மாடுகளும், குறைவாகவே பால் கறப்பதால், இருக்கும் சில நாட்டு மாடுகளும் இன்று மாமிசதிற்கு ஏற்றுமதியாகிறது.

மஞ்சு விரட்டு - எருது விரட்டு மற்றும் ஏறு தழுவலுக்காக (ஜல்லிக்கட்டு) வளர்க்கப்பட்ட காளைகள், இனப்பெருக்கத் திற்காகவும் பயன் பட்டதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் நாட்டு மாட்டினங்களை ஒழிப்பதற்காக, மேற்கண்ட வீர விளையாட்டு களுக்கு, விலங்குகள் நல அமைப் பினர் ஏற்படுத்தியத் தடையால், தமிழனின் வீர விளையாட்டுகள் அழிந்தது. ஆம் அதற்காக வளர்க்கப்பட்ட காளைகள் கறிக்காக ஏற்று மதியாகிறது. இதனால் நாட்டு மாடுகள் இனமான தமிழ்நாட்டு இன பசுக்கள் மற்றும் எருதுகளும் அழிந்து வருகிறது என்பதே உண்மை.

தமிழர் இனம் நோயற்ற இனமாக காக்கப்பட வேண்டும். அதற்குத் தேவை A2புரதப்பால்.  இந்த பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகளை வளர்ப்போம். இந்த நாட்டு மாடுகளை வளர்க்கும் உழவர்களை ஆதரிப்போம். இதன் மூலம் நம் தமிழர் இனம் நோயற்ற இனமாகக் காக்கப்படும்.

எழுத்தாளர்: யாழ் இனியன்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு பகிர்வு:

ஆர்கானிக் சான்றிதழ் பெறும் முறைகள் !!

ஆர்கானிக் சான்றிதழ் பெறும் முறைகள் !!

🌿 இன்று நம் மக்களிடையே இயற்கை விவசாயம் என்ற வார்த்தை மிகவும் பிரபலமடைந்துள்ளது. இயற்கை விவசாய முறையில் உருவாக்கப்பட்ட விளைபொருட்களின் ஆர்கானிக் கடைகளும் தற்போது அதிகம் உருவாகி வருகிறது.

🌽 இயற்கை முறையில் பொருள்களை விளைவிப்பதால் விளை பொருட்கள் தரமானதாக இருப்பதுடன், நிலமும் வளமாக மாறுகிறது.

🌾 தமிழ்நாட்டில் பெரும்பாலும் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் விவசாயிகள், அதற்கான சான்றிதழ் பெறுவது இல்லை. இதனால் இயற்கை முறையில் விளைவிக்கும் நஞ்சில்லா பொருள்களுக்கும், சந்தையில் கிடைக்கும் நஞ்சான பொருள்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி சிலபேருக்கு தெரிவதில்லை.

🍃 இயற்கை வேளாண்மை என்பது பு மி என்ன கொடுக்கிறதோ அதை எடுத்துக்கொள்வதே ஆகும். அதில் மனிதனின் வேலை விதைப்பதும், அறுவடை செய்வதும் மட்டும்தான்.

🌾 அதே சமயம், ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி செய்யும் விவசாயத்துக்கு தமிழ்நாடு அரசு 'அங்கக வேளாண்மை" என பெயரிட்டுள்ளது.

👉 அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மைக்கான சான்று (ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn) பெற்றிருப்பது அவசியம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விலைபொருட்களை விற்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் இந்த சான்றிதழ் மிகவும் அவசியமானது.

📄 தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (வுயஅடையெனர ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn ழக னுநியசவஅநவெ) நிறுவனம் 'அபீடா" (யுPநுனுயு) என்ற நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

📃 முதலில் அங்கக சான்றிதழ் (ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn) பெற விரும்புவோர், அங்ககச் சான்றளிப்புத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கக வேளாண்மையில் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து பதிவு செய்துகொண்டால், சில ஆய்வுகளுக்குப் பிறகு அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் உங்களுக்கு அளிக்கப்படும்.

📄 அங்ககச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை றறற.வழெஉன.நெவ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

👉 இந்த விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் பண்ணையின் பொது விபரம், பண்ணையின் வரைபடம், மண், பாசனநீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம் (பட்டா, சிட்டா நகல்) பான் கார்டு ஆகிய விவரங்களை மூன்று நகல்களுடன், பதிவுக்கான கட்டணத்தை வரைவோலையாக(னுனு) எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

📃 விண்ணப்பத்தை பரிசீலித்து முறையான ஆய்வுக்குப் பிறகு, தகுதியான நபர்களுக்கு அங்கக விளைபொருள்கள் உற்பத்தியாளர், அங்கக விளைபொருள் பதனிடுவோர் மற்றும் அங்கக விளைபொருள் விற்பனை செய்வோர் என அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

👉 இதில், ஒவ்வொரு பிரிவினருக்குமான விதிகள் இருக்கின்றன. தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு 2,700 ரூபாயும், தனிநபர் பிற விவசாயிகளுக்கு 3,200 ரூபாயும், குழுப்பதிவுக்கு 7,200 ரூபாயும் சான்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

📄 இதை வங்கி வரைவோலையாக ('னுசைநஉவழச ழக ழுசபயniஉ ஊநசவகைiஉயவழைn' ஊழiஅடியவழசந) என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

👉 மேலும் விபரங்களுக்கு 0422-2435080 என்ற தொலைபோசி எண்ணிற்கோ அல்லது,

👉 விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர்,
1424 யு, தடாகம் சாலை,
ஜி.சி.டி. போஸ்ட்,
கோயம்புத்தூர் -

ஜீரோ பட்ஜெட் விவசாயம்

மானாவாரி நிலத்தில் நீர் சேமிக்கும் முறைகள்

களைகள் - நன்மையா தீமையா?

இதுதான் தன் தலையில் தானே  மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது  என்பதா? ?

.
களைகள் என்றாலே அவை தனது முதல் எதிரிகள் என்ற நினைப்பு களைக்கொல்லிகளின் வரவிற்குபின் விவசாயிகளுக்கு  வந்துவிட்டது.
.
களைக்கொல்லிகளின் வருகைக்கு முன் நமது விவசாயிகள்  அவற்றினை மிகவும் எளிதாக கையாண்டு கொண்டிருந்தார்கள்.
.
களைகளைப்பற்றிய புரிதலை நமது விவசாய சமூகம் இழந்துவிட்டபின் அதுவே  மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது.
.

களைகள்  விவசாயிகளுக்கு என்னதான் நன்மை தருகின்றன.?

.
களைகள் தான் வளரும்போது அதனது வேர்கள் நுண்ணுயிர்களுடன் சத்துமாற்று முறை மூலம் ஒட்டுறவை ஏற்படுத்திக்கொண்டு வான்வெளிப்பகுதி தழைச்சத்தை நிலைநிறுத்துவதோடு மற்ற கிடைக்காநிலை சத்துக்களையும் கிடைக்கச்செய்கிறது.
.
மற்றும்   களைகள் ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அவை முற்றினாலோ / இடையில் காய்ந்துவிட்டாலோ நிலத்தில் உதிர்ந்து  அதிலிருந்து அனைத்து சத்துக்கள் மற்றும் organic carbon 
சாகுபடி  பயிர்களுக்கும்  மற்ற தாவரங்களுக்கும் அவ்வளவு ஏன் மீண்டும் நுண்ணுயிர்களுக்கும் போதிய உணவை அளிக்கிறது.
.
 மழை பெய்யும்போது தண்ணீர் . வயல்கள் ஒரு அளவிற்கு மட்டுமே அதனை தன்னுள் பிடித்து வைத்துக் கொள்ளும்.
.
மழையின்  அளவு அதிகரிக்கும்போது மண்ணில் உள்ள சத்துக்கள் கரைந்து மண்ணிற்கு அடியே சேமிப்பு பகுதிகளுக்கு செல்லவும்,  வயலைவிட்டு வெளியேறவும் செய்கின்றன.
.
வெளியேறும் சத்துக்களில் அதிக அளவில் இருக்கும் பேரூட்டங்களாக இருந்தால் பரவாயில்லை அவற்றினை விவசாயிகள் கடைகளில் வாங்கி போட்டு விடுவார்கள்.
.
மிகக் குறைந்த அளவில் இருக்கும் மற்றும் விரைவில் மண்ணில் சேர்த்திட இயலாத ( Fe, Mn, Zn, Cu ,  Bo )  ஆகிய நுண்ணுாட்டங்கள் வெளியேறிவிட்டால் அதனை ஈடு செய்ய இயலாது.
.
எல்லா சத்துக்களையும் எடுத்துக் கொண்டு விளைச்சலைத்தரும் பயிரின் எந்த பகுதியையும் வயலுக்கு சிறிதும் தராத  நமது விவசாயிகள்  பெரும்பாலோனோர்  நுண்ணுாட்டங்களை வயலுக்கு கொடுப்பதே இல்லை
.
எந்த சாகுபடி பயிரும் அனைத்து தேவையான பேரூட்டங்கள் மற்றும் நுண்ணுாட்டங்கள் இல்லாமல் நல்ல மகசூல்தரவோ, தனது ஆயுளை கெளரமாகவும் முடித்துக்கொள்ளவோ இயலாது.
.
மொத்தத்தில் களைகள் நுண்ணுாட்டங்களை சேமிக்கும் ஒரு சேமிப்பு தொட்டியாக இருப்பதுகூட  நமது விவசாயிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிக செலவு செய்து அக்களைகளையும் அழித்து தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்கின்றனர்.

உரம்

பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர்.
வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.

  இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். இத்துடன் இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயி தனபால் கூறுகையில், “”பூண்டின் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கிறது,” என்றார்

"மண்" வளம் காக்க

காக்க காக்க தாயினும் மேலான "மண்" வளம் காக்க


விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.
ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.
பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும்.

பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) பட்டியலில் தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளிஞ்சி, நரிப்பயிறு, கிளைரிசிடியா உள்ளிட்ட பயிர்கள் உள்ளன.

இதில் சணப்பை பயிரிடுவது குறித்து:

பயிர்களுக்கு உயிர் உரம் இடுவதில் முக்கியமானது சணப்பை. இந்தப் பயிர்கள் வேகமாக வளரக் கூடிய தழை, நார்ப்பயிர். தீவனப் பயிராகவும் வளர்க்கலாம்.
நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரமாகும்.

சணப்பை இடும் முறைகள்: 

அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் விதை உற்பத்தி செய்யலாம். வண்டல் மண்ணுக்கு ஏற்றது. அனைத்து வகை மண்ணிலும் விதைக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ முதல் 35 கிலோ வரை பயிரிடலாம். விதை நேர்த்தி அவசியமில்லை. இடைவெளி 45 ல 20 சென்டி மீட்டர் என்ற அளவில் இட வேண்டும்.
இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. பயிர் பாதுகாப்பு அவசியமும் இல்லை. 30 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்தால் போதுமானது. 45 நாள் முதல் 60 நாள்களுக்குள் அறுவடை செய்து மண்ணில் மக்க வைத்து உழவு செய்ய
வேண்டும் அல்லது நன்றாக பூத்துக்குளிங்கும் நிலையில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு அறுவடைக்கும் பசுந்தாள் உரங்களை முறையாக இட்டு பயிரிட்டால் விவசாயிகளான நாம் முழு பலன்களை அடையாலாம் தோழமைகளே.

மண் வளம் மேம்பட ....

-------------------------------------------
மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது:

1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது).


இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது.
கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது.
நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும்.
மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும்.

வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும்.

கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருட காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று நம் தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர்.
வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

பலபயிர் வளர்ப்பு:-

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் கலந்து விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன.

தானியப்பயிர் :

----------------------------
சோளம் :- 1 கிலோ
கம்பு :- 1/2 கிலோ
தினை :- 1/4 கிலோ
சாமை :- 1/4 கிலோ
பயிறு வகை :
உளுந்து :- 1 கிலோ
பாசிப்பயறு :- 1 கிலோ
தட்டைப்பயிறு :- 1 கிலோ
கொண்டைக்கடலை :-1 கிலோ
பசுந்தாள் பயிர்கள் :
தக்கை பூண்டு :- 2 கிலோ
சணப்பை :- 2 கிலோ
நரிப்பயறு :- 1/2 கிலோ
கொள்ளு :- 1 கிலோ
மணப்பயிர்கள்:-
கடுகு :-1/2 கிலோ
வெந்தயம் :-1/4 கிலோ
சீரகம் :-1/4 கிலோ
கொத்தமல்லி :- 1 கிலோ
இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.
இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு உண்டானது.

மண் வகைக்கு ஏற்ற மர வகைகள் :

கரிசல் மண்:

புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி , சவுக்கு,வேம்பு ,வாகை.

வண்டல் மண்:

தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் , சவுண்டல் ,புளி.

களர்மண்:

குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை.

உவர் மண் :

சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு.

அமில நிலம் :

குமிழ்,சில்வர் ஒக்.

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் :

பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை & புங்கன்.

வறண்ட மண் :

ஆயிலை , பனை , வேம்பு, குடைவேல், செஞ்சந்தனம்.

களிமண் :

வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்.

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்:

வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்.

குறைந்த அழமான மண் :

ஆயிலை ,ஆச்சா , வேம்பு, புளி வகை & பனை.


பூமிக்குத் தேவை கழிவு


இயற்கையில சில விதிகள் இருக்கு. அந்த இயற்கை விதிகள் நீங்க, நான் எல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடியே இருந்தது. நாம செத்துப்போனதுக்கு அப்புறமும் அது இருக்கும். அந்த இயற்கை விதிகளை மட்டும் நாம தெரிஞ்சுக்கிட்டோம்னா போதும். வயலுக்கு என்ன போடணும்னு ஒரு விவசாயி கிட்ட கேட்டா 40 விழுக்காடு நைட்ரஜன் போடணும், அதாவது என் போடணும், 20 பி போடணும், 20 கே போடணும்னு சொல்றாங்க. அந்த ரசாயனத்தைப் போடப் போட என்ன ஆகுதுன்னா, பூமியில இருக்கிற உயிரெல்லாம் செத்துப்போகுது.

செத்துப் போகுதுன்னா இந்த மண்ணுல இருக்கிற உயிரை எல்லாம் வளர்க்கிறதுக்கு என்ன செய்யணும்? ரசாயனத்தைப் போடக் கூடாது. விஷத்தைப் போடக் கூடாது. போட்டா அது செத்துப்போயிடும். அதுக்குப் பதிலா அது கேட்கிறது, கழிவுகளைத்தான்.

ஆட்டுப் புழுக்கையப் போடும் போது, மாட்டு சாணியப் போடும்போது, கோழிக் கழிவை போடும்போது, இந்த இலை தழைகளை வெச்சு சாணித் தண்ணியத் தெளிச்சு கம்போஸ்ட் ஆக்கி மண்ணுல போடும்போது நாம என்ன செய்யிறோம்? நுண்ணுயிர்களுக்கு சாப்பாடு தர்றோம். பூமி கழிவுகளை மட்டும்தான் கேட்கும். ஆகையினால நாம கழிவுகளை மட்டும் பூமிக்குத் திருப்பித் தர பழகிட்டோம்ணா, பூமி நமக்கு நல்லபடியாத் திருப்பிக் கொடுத்துக்கிட்டே இருக்கும்.

வேருக்கு உணவு தரும் இலை


‘அக்ரிகல்சர் இஸ் ஹார்வெஸ்டிங் தி சோலார் எனர்ஜி’. இந்த சூரிய வெளிச்சத்தை அதிகபட்சமா, நாம எப்படி அறுவடை செய்யப்போறோம்? அதுதான் இங்கே தேவை. ரெண்டாவது என்னன்னாக்க, அதுக்குத் துணையா நாம செய்ய வேண்டியது ‘ஃபீடிங் தி பாக்டீரியா’.

‘ஃபோட்டோசிந்தசிஸ்’னு ஒன்னு இருக்கு. சூரியன்ல இருந்து வர்ற வெளிச்சத்தைப் பச்சை இலை வாங்கி, அதை சர்க்கரையா மாத்திடுது. அது சர்க்கரையைத் தின்னுட்டு, மிச்சத்தை வேருக்கு அனுப்பிடுது. அந்த வேரு எல்லா இடத்துலயும் பரவலா ஓடி பூமியில் இருக்கிற தண்ணிய எடுத்து, மறுபடியும் பச்சை இலைக்கு அனுப்புது. இலை, வேருக்கு சாப்பாடு போடுதே ஒழிய, வேர் இலைக்கு சாப்பாடு போடலை.

அதனால வேர் மூலமா இலைக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்னு சொன்னா, அது சயின்ஸ் இல்ல. முதல்ல இதை முடிவு பண்ணிட்டீங்கன்னா யாரை வேணும்னாலும் நாம திருப்திப்படுத்தலாம்.

நுண்ணுயிர் தரும் உரம்


அப்ப நாம ஆட்டுப் புளுக்கை, மாட்டுச் சாணிய மண்ணுல போடுறோமே, அப்ப அது என்ன? அது என்னன்னா, மண்ணுல இருக்குற நுண்ணுயிரிங்கதாங்க. இன்னைக்கு, அதை நிறைய பாக்கெட்டுல எல்லாம் போட்டு விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். அசோஸ்பயிரில்லம்கிறோம், ரைசோபியோம்கிறோம், பாஸ்போபாக்டீரியம்கிறோம், சூடோமோனாசுங்கிறோம். அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள். இந்த கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் காத்துல இருக்கிற நைட்ரஜனை எடுத்து செடிக்கு விநியோகம் பண்ணுது.

பூமியில உறைஞ்சு கிடக்கிற பாஸ்பரஸை இளக்கி விநியோகம் பண்ணுது. அந்த பூமியில இருக்கிற ஒவ்வொரு பொருளையும் பொட்டாஷா மாத்தி, விநியோகம் பண்ணுது. நீங்க எதை எதையெல்லாம் கடையில இருந்து வாங்கியாந்து போடணும்னு நினைக்கிறீங்களோ, அது எதையும் வாங்கியாந்து போட வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வளவையும் பூமியில இருக்கிற நுண்ணுயிரிங்க செய்யுது.

செம்மறி/வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம்

செம்மறி/வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம் கொடுப்பது அவசியமா?


ஆடுகளுக்கு கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் அடர் தீவனம் அளிப்பது அவசியம்.

1. போதிய அளவிற்கு தரமான தீவனப் பயிர்கள் கிடைக்காத நிலைமை.

2. கருவுற்றிருக்கும் காலத்தின் கடைசி பகுதி மற்றும் பால் கொடுக்கும் காலத்தின் முற்பகுதி ஆகிய சமயங்களில் அதிகமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அளிக்க அடர் தீவனம் அளித்தல் அவசியம்.

மேய்ச்சலுடன் எந்த வகை தீவனங்களை செம்மறி/வெள்ளாடுகளுக்கு கூடுதலாகத் தர வேண்டும்?

மேய்ச்சலுடன் ஆடுகளுக்கு கூடுதலாக அளிக்கக் கூடிய தீவனங்கள் :

i) கடலைக்கொடி

ii) மர இலைகள்

iii) பயறுவகைத் தீவனப் பயிர்கள்

iv) அடர் தீவனங்கள்

சாகுபடி செய்யக்கூடிய தீவனப் பயிர்கள் யாவை?

அவற்றின் விதை/கரணைகள் எங்கு கிடைக்கும்?

a) தீவனப் பயிர்கள் :


1. தானிய வகை தீவனப் பயிர்கள் : கோ- 27 தீவனப்பயிர், கோ-10 தீவனப்பயிர், தீவன மக்காச்சோளம், தீவனக் கம்பு (கோ-8), நேப்பியர் & கம்பு ஒட்டுப்புல்- கோ-1, கோ-2, கோ-3, கினிப்புல், ஹமில் புல், கொழுக்கட்டைப்புல், சுடான் புல், பாராப் புல், கர்னால் புல்.

2. பயறுவகைத் தீவனப்பயிர்கள்:காராமணி (கோ-5), வேலிமசால், முயல் மசால், குதிரை மசால், சணப்பை கலப்ப கோனியம்.

b) தீவன மரங்கள் :


வெல்வேலம், கருவேலம், குடைவேலம், பெருமரம், வாகை, பலா, வேம்பு, மந்தாரை, இலவம், வேடத்தான், தூங்குமூஞ்சி, முல்லு முருங்கை, ஆலமரம், அரசமரம், வேலிக்காட்டாமணக்கு, அச்சன், கொடுக்காப்புளி, ஒதியன், சவுண்டல், மா, முருங்கை, வேலிக்கருவேல், புங்கம், அகத்தி, புளி, பூவரசு, இலந்தை.

புல் கரணைகள் கிடைக்குமிடம் :


விலங்கின அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்
காட்டுப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் அஞ்சல்-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.

விதைகள் கிடைக்குமிடம் :


1. மாநில விதைப்பண்ணை, படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.

2. மண்டல தீவனப்பயிர் ஆராய்ச்சி மற்றும் செயல் விளக்க மையம்,
அலமாதி,
திருவள்ளுர் மாவட்டம்-600 052.

3. தாவர மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.

4. வேளாண் தொழில் நுட்பத் தகவல் மையம்,
காட்டுப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் (அஞ்சல்)-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.

கை கொடுக்கும் கருணை கிழங்கு

கை கொடுக்கும் கருணை கிழங்கு



ஒரே தண்ணீர், ஒரே பராமரிப்பில் வெங்காயம், கருணை கிழங்கு என இரண்டு பயிர்களுடன் இரட்டை லாபமும் ஈட்ட வழிகாட்டும் விவசாயி காந்தி கூறுகிறார் :

தஞ்சாவூர் அடுத்த வளப்பக்குடியை சேர்ந்தவன் நான். விதைப்பதற்கு முன் வயலை நன்கு தயார் செய்ய வேண்டும். பின் புழுதி அடித்து சமப்படுத்தி, பாத்திகள் பிரித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிரித்த பின், முதலில் கருணைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.

கருணைக்கிழங்கை பொறுத்தவரை, நல்ல விதை கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும்; பூச்சித் தாக்குதலும் குறைவாக இருக்கும்.

அதைப் போலவே, பார் பிரித்து, வெங்காயத்தை ஊடு பயிராக நடவு செய்ய வேண்டும். வெங்காயம் 60 நாள் பயிர். இது குறைந்த நாட்களில் நிறைந்த லாபம் தரக்கூடியது.

வெங்காயத்தை பொறுத்தவரை, வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. அவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில், வெங்காயம் அழுகி விடும். வெங்காயம் வயலில் இருக்கும் நேரத்தில், கருணைக் கிழங்குக்கு என, தனியாக பராமரிப்பு செய்ய தேவையில்லை.

வெங்காயத்திற்கு விடும் தண்ணீர் மற்றும் இடு பொருள்களை கொண்டே கருணைக் கிழங்கு நன்றாக வளர்ந்து விடும்.

வெங்காயத்தை அறுவடை செய்த பின், கருணைக் கிழங்கு மட்டும் வயலில் இருக்கும். அப்போது கருணைக் கிழங்குக்கு ஒரு களை கொத்தி விட வேண்டும். அப்போது இருக்கும் பயிர்களின் ஊக்கத்திற்கு ஏற்ப, ஏதேனும் இடுபொருள் இடலாம்.

கருணைக் கிழங்குக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. தண்ணீர் அதிகம் தேவையில்லாத பயிர்.

அதேபோல வெங்காயத்திற்கும், அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரே நேரத்தில் ஒரே தண்ணீரை பயன்படுத்தி, இரண்டு பயிர் செய்வதால் இரட்டை லாபம் ஈட்ட முடியும்.

வெங்காயம், 60 நாளில் அறுவடைக்கு வரும். அப்போது நாம், 5 டன் வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.

அதன்பின் ஆறு மாதம் கழித்து, கருணைக் கிழங்கை அறுவடை செய்யும் போது, 12 டன் வரை கருணைக் கிழங்கு கிடைக்கும்.

கருணைக் கிழங்குக்கு இப்போது நல்ல சந்தை இருக்கிறது. அதனால் விற்பனை குறித்த பயம் இல்லை. அதேபோல தண்ணீர் பிரச்னை, பூச்சி தாக்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது தாக்குப்பிடித்து கை கொடுப்பதில் கருணை, விவசாயிக்கு நல்ல நண்பன்.

கருணை மூலமாக மட்டும், ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். வெங்காயம் மூலமும் லாபம் ஈட்டலாம். கருணை, விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்புக்கு: 9976108280

ஆடு வளர்ப்பு

Click here to download : ஆடு வளர்ப்பு

இயற்கை வழி நாட்டு கோழி வளர்ப்பு

பாரம்பரிய நெல் வகைகள்

 பாரம்பரிய நெல் வகைகள்...*


1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம்
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை
121. வெளியான்
122. ராஜமுடி
123. அறுபதாம் சம்பா
124. காட்டு வாணிபம்
125. சடைக்கார்
126. சம்யா
127. மரநெல்
128. கல்லுண்டை
129. செம்பினிப் பிரியன்
130. காஷ்மீர் டால்
131. கார் நெல்
132. மொட்டக்கூர்
133. ராமகல்லி
134. ஜீரா
135. சுடர்ஹால்
136. பதரியா
137. சுதர்
138. திமாரி கமோடு
139. ஜல்ஜிரா
140. மல் காமோடு
141. ரட்னசுடிn
142. ஹாலு உப்பலு
143. சித்த சன்னா
144. வரேடப்பன சேன்
145. சிட்டிகா நெல்
146. கரிகஜவலி
147. கரிஜாடி
148. சன்னக்கி நெல்
149. கட்கா
150. சிங்கினிகார்
151. செம்பாலை.
152. மிளகி
153. வால் சிவப்பு
போன்றவை

நாட்டு கோழி பண்ணை அமைப்பு

நாட்டு கோழி பண்ணை அமைப்பு


நாட்டுகோழி பண்ணை

நாட்டுகோழி பண்ணை  அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி  உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை  பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின்  மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன்  மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில்  போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக  வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறியஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம்  பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000  கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்

கோழிகளுக்கு உணவாக  பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு

தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே   ஒரு கோழிக்கு நோய் வந்தாலும்  உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை

குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

நன்மை தீமை செய்யும் பூச்சிகள்

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

click here to download : பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்


மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி?


கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இதனாலே என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? உண்ணி இருந்தால் நாங்கள் கையில் பிடித்து நெருப்பில் போட்டுவிடுவோம் என்று சொல்கிறீர்கள். இங்க பாருங்க!

இந்த உண்ணிங்க ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும். மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும். பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும். எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும். நீங்கள் சொன்ன மாதிரி உண்ணிகளை கையில் பிடித்து நெருப்பில் போடுவது, மாடு மேல் மண்ணெண்ணெய் தடவுவது போன்று செய்யாமல் பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும். குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.

மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும். ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும். ஒரு உண்ணி சுமார் 18,000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18,000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும். எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும்.

உயிர் உரங்கள்




உயிர் உரங்கள்  

ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள உயிரை அல்லது செயலற்ற உயிரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம்.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக இருக்கிறது.


🌻ரைசோபியம்:


ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித் தோற்றம்,இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும்.

பயன்கள் :

வளிமண்டலத்திள் உள்ள தழைச்சத்தைமண்ணில் நிலைநிறுத்துகிறது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

அனைத்து பயறு வகைப் பயிர்களுக்கும்.(
உளுந்து, பாசிப்பயறு, அவரை, துவரை, மொச்சை, நிலக்கடலை , காராமணி)


🌻 அசோஸ்பைரில்லம்


அசோஸ்பைரில்லம் லிபோபெரம் மற்றும் அசோஸ்பைரில்லம். ப்ரேஸிலென்ஸ் (முன்பு ஸ்பெரில்லம் லிபோபெரம்) மண்ணில் உயிர் வாழக் கூடியவை. புல்வகை பயிர்களில் வேர்த்தண்டுப்பகுதி மற்றும் வேர்தக்கைப் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில் உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில் உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் பிரித்தெடுக்கப்பட்டது.

பயன்கள்

வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தைமண்ணில் நிலைநிறுத்தும்.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

நெல் மற்றும் தானிய வகை பயிர்கள்.

🌻 அசட்டோபாக்டர்:

 இது தன்னிச்சையாக வாழும். காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. இது உயிர் உரமாக பயிறுவகை அல்லாத பயிர்களுக்கு முக்கியமாக நெல், பருத்தி, காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அசட்டோபாக்டர் உயிரணுக்கள் வேர்சூழ் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும். மண்ணில் குறைவாக உள்ள அங்ககப் பொருளால்  அசட்டோபாக்டர் வளர்ச்சி மண்ணில் பாதிக்கும்.

பயன்கள்:

வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை
மண்ணில் நிலைநிறுத்தும்.

🌻 அசிட்டோபாக்டர்:

இது கரும்பு ,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, இனிப்பு சோளம் உடன் இணைந்திருக்கும் நுண்ணுயிரி. ஒரு வருடத்திற்கு ஒருஎக்டர்க்கு 30 கிலோ தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதுகுறிப்பாக  கரும்பு பயிருக்காக வாணிபமாக்கப்பட்டுள்ளது.விளைச்சல் ஒரு எக்டர்க்கு 10 – 20 கிலோ அளவும், 10 – 15 சதவீத அளவு சர்க்கரை அளவையும் அதிகப்படுத்துகிறது.

🌻 பாஸ்போ பாக்டீரியா:


பயன்கள்:

மண்ணில் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு கொடுக்கிறது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

அனைத்து பயிர்களுக்கும்.

🌻 வேர் உட்பூசாணம் (வேம்):

ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்துக் கொள்ள குமிழிகளையும், வேரில் ஊட்டச்சத்துக்களை பிரிப்பதையும்கொண்ட போரினங்களான குளோமஸ், அக்லூஸ்போரா, ஸ்கிளிரோ சிஸ்ட், என்டோகோன் ஆகியவற்றின் உடைய உயிரணுக்குள்ளே இருக்கும் கட்டுப்பட்ட பூஞ்சான் உள்ளுறைக் கூட்டுயிரினால் ஊட்டச்சத்துக்கள் முக்கியமாக மணிச்சத்து, துத்தநாகம், கந்தகம் போன்றவை மண்ணிலிருந்துவேர்த்தக்கையின் உயிரணுக்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. பொதுவான பேரினமான குளோமஸின் பலதரப்பட்ட வகைகள் மண்ணில் பரவி இருக்கின்றன. தழைச்சத்தை நிலைநிறுத்துவதில் ஏ. எம். பூஞ்சானின் பங்களிப்பு பயிருக்கு அதிகளவில் இருந்தாலும், இதை பெரியஅளவில் உற்பத்தி செய்வது தடையாக உள்ளது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:

அனைத்து பயிர்களுக்கும்.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:

1.விதை நேர்த்தி:
600 கிராம் உயிர் உரத்தை ஆரிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

2.வேர் குளியல்:
600 கிராம் உயிர் உரத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுக்களின் வேர்களை அதில் நனைத்து நடவு செய்யலாம்.

3.வயலில் இடுதல்:
10 கிலோ உயிர் உரத்தை 100 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் இடலாம்.

உயிர் உரங்களின் பொதுவான பயன்கள்:

🌾முளைப்புத் திறனை அதிகரிக்கிறது.

🌾பயிரின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

🌾மண்ணில் உள்ள நுண்ணூட்டங்களை எளிதில் பயிர்களுக்கு கிடைக்ச் செய்கிறது.

🌾மகசூளை அதிகரிக்கிறது.

🌾பயிரில் தோன்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.

🌾வறச்சியை தாங்கி வளரச் செய்கிறது.

🌻 குறிப்பு:🙋‍♂


☘உயிர் உரங்களை நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் வைக்கக் கூடாது.

☘30 டிகிரி வெப்பநிலைக்குக் குறைவான இடங்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்ம்.

☘பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக்கொல்லி மருந்துகள் மற்றும் இதர ரசாயன உரங்களுடன் கலக்கக் கூடாது.

🌻சைனோபாக்டீரியா: தன்னிச்சையாக உயிர்வாழும் மற்றும் இணைவாழ் தன்மையுடைய சைனோபாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடிமுறை சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்கிறது. நெல் வயல்களில் ஒரு எக்டர்க்கு 10 கிலோ என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது. முடிவில் இருக்கக்கூடியப் பொருள் வெளியில் உள்ள பொருள்களால் மாசுபடுகிறது மற்றும் அடிக்கடி பாசியின் வளர்ச்சி இருக்கிறதா என்றும் கண்காணிக்க முடிவதில்லை.நெல் பயிருக்கு அளிக்கக்கூடிய பிரபலமான உயிர் உரமாக இருந்தாலும், தற்போது இந்தியாவில் உள்ள விவசாயிகள் (தென் மாநிலங்களைத் தவிர குறிப்பாக தமிழ்நாடு) பயன்படுத்துவது இல்லை. பாசியை வயலில் வளர்ப்பதால், சாதகமான சூழ்நிலையில் தழைச்சத்து ஒரு எக்டர்க்கு 20 – 30கிலோ அளவு நிலைப்படுத்தப்படுகிறது.

🌻அசோலா:


அசோலா தண்ணீரில் தன்னிச்சையாக மிதக்கக்கூடிய பெரணியாகும். இது காற்றிலுள்ள தழைச்சத்தை நீலப்பச்சைப் பாசியான அனபீனா அசோலாவுடன் இணைந்து நிலைப்படுத்துகிறது.நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு எக்டர்க்கு 40 – 60 கிலோ தழைச்சத்தை நெல்பயிருக்கு தருகிறது.


🌻 பி.பி.எப்.எம்: (பிங்க் பிக்மென்டட் பேகல்டேட்டிவ் மெத்லோடிராப்ஸ்)


வறட்சி ஏற்படும் சமயங்களில், இந்த"பி.பி.எப்.எம்.,' நுண்ணுயிரியை தெளிப்பதன் மூலம், பயிர்களின் இலைகளின், மேற்பரப்பில் உள்ள துளைகள் மூடப்படும். இதன்மூலம், நீராவியாகும் செயல் தடுக்கப்படும். இதனால், 10 முதல் 15 நாட்கள் வரை பயிர்கள் வறட்சியை தாங்கி நிற்கும்.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:


நெல்லிற்கு மட்டும்.

🐛 பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்: 🐛


        வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும்.நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள் இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது.நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பதே இந்த பதிவின் நோக்கம்.

💥நோய் மேலாண்மை:💥


🌻 டிரைக்கோடெர்மா விரிடி:


இது ஒரு பூஞ்சை வகை நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:

பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் ஏற்படக்கூடிய வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்துகிறது.மேலும் பல பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

அளவு:

விதைநேர்த்தி: 1கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.

நேரடி வயலில் இடுதல்:ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

🌻சூடோமோனஸ் புளூரசன்ஸ்:


இது பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:
நெற்பயிரில் ஏற்படும் குலைநோய்,இலை உறை அழுகல் நோய்,இலை உறை கருகல் நோய்,பயறு வகைகளில் ஏற்படும் வாடல் நோய்,வாழை வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் அளவு:

*விதை நேர்த்தி:*1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.

*நேரடி வயலில் இடுதல்:*1 கிலோ சூடோமோனஸை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து  இடவும்.

இலை வழி தெளித்தல்:
0.2% கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும்.

🌻வேர் உட்பூசாணம்(வேம்):

இது ஒரு கூட்டுயிரி பூஞ்சையாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:
பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் நோய் மற்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:

ஏக்கருக்கு 5 கிலோ வேர் உட்பூசாணத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

🌻பேசிலஸ் சப்டிலிஸ்:


இது பக்டீரிய வகை நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் நோய்கள்:
சாம்பல் நோய்,வேர் அழுகல்,நாற்றழுகல்,கிழங்கு அழுகல்,வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

இலை வழி தெளித்தல்:ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

நேரடி வயலில் இடுதல் : ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.

💥பூச்சி மேலாண்மை💥:


🌻மெட்டாரைசியம் அனிசோபிலே:
இது ஒரு வகை பச்சை நிறமுடைய பூஞ்சாண வகை நுண்ணுயிரியாகும்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

தென்னையில் தோன்றும் காண்டாமிருக வண்டிணை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லி தண்ணீரில் கலந்து மரங்களின் மேல் தெளிக்கவும்.

🌻பியுவேரியா பேசியானா:


இது ஒரு வகை வெண்மை நிறமுடைய பூஞ்சையாகும்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:பயிர்களில் தோன்றும் இலை உண்ணும் புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

🌻பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ்:


இது ஒரு  பக்டீரிய வகை நுண்ணுயிரியாகும். புழுக்களின் வயிற்று பகுதியை பாதித்து விடுவதால் உணவு உண்ண முடியாமல் பாதிக்கப்பட்ட புழுக்கள் இறந்து விடுகின்றன.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:காய்கறிப் பயிர்கள் மற்றும் பருத்தியில் தோன்றும் காய் புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:ஏக்கருக்கு 500 மிலி 100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

🌻பெசிலோமைசிஸ்:


பயிர்களில் தோன்றும் நூற்புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு:ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் இடவும்.

🌻என் பீவி வைரஸ்:


கட்டுப்படுத்தும் பூச்சிகள்:ஆமணக்கில் தோன்றும் புகையிலைப் புழு ,காய்கறி பயிர்கள் மற்றும் பருத்தியில் தோன்றும் காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும்.பாதிக்கப்பட்ட புழுக்கள் செடிகளின் மேல்புறமாகச் சென்று தலைகீழாகத் தொங்கி இறந்து விடுகின்றன.

பயன்படுத்தும் முறை மற்றும் அளவு: ஏக்கருக்கு 250 மிலி திரவத்தை 100 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

குறிப்பு:

🌾உயிர் பூஞ்சாணக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளை 30 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்கவும்.

🌾இராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலக்க கூடாது

நாட்டுக் கோழி வளர்ப்பு

நாட்டுக் கோழி வளர்ப்பு

நாட்டுக் கோழி வளர்ப்பு - நாட்டு கோழிகள் என்பது புறக்கடையில் அதாவது வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சுற்றி திரிந்து கிடைக்கும் பூச்சி , புழு மற்றும் சிதறிய தானியங்கள் ஆகியவற்றை உண்டு வளர்ந்து வருபவை. இது பழங்காலத்தில் நம் முன்னோர்களால் வீட்டின் புரத தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.
பழங்கால முறைகளில் உள்ள குறைகளை களைந்து ஒரு சிறப்பான லாபகரமான முறையை பின்பற்றி நாட்டு கோழி வளர்ப்பில் நல்ல லாபம் அடையலாம்
நாட்டு கோழிகளில் குஞ்சுககளை பருந்து, காகம் மற்றும் கீரி போன்றவைகள் வேட்டையாடி இழப்புகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய குஞ்சுகள் பிறந்து ஒரு மாதம் வரை தாய்கோழியையும் குஞ்சுகளையும் வெளியே அதிகம் விடாமல் ஒரு சின்ன கொட்டகையே உருவாக்கி வளர்த்தலாம்.
நாட்டு கோழி வளர்ப்பில் தீவனம் சரியான அளவில் மற்றும் சரியான விகிதத்தில் கொடுக்கலாம். சோளம் , உடைந்த அரிசி மற்றும் கரையான்களை உற்பத்தி செய்து கொடுக்கலாம்.
புழு  மற்றும் பூச்சிகள் கிடைக்காத கோடை மாதங்களில் கோழிகளில் வளர்ச்சி குறைவு, முட்டைகள் குஞ்சு ப் பொரிக்கும் விகிதம் குறைவு மற்றும் பிறந்த குஞ்சுகளின் இறப்பு ஆகியவை காணப்படும். இவையனைத்தும் புரத சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஒரே சிறந்த மற்றும் எளிய முறை கரையான் உற்பத்தி மட்டுமே. இதை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
நாட்டு க் கோழி வளர்ப்பில் குடற்புழு நீக்கம் மற்றும் கோழிக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி தவறாமல் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்


தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்

சிகிச்சை முறை (வாய் வழியாக):


சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.

கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா


அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது. அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம்) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்


கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான் செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது. நன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா? முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்

குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இது இலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம் அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக் குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று அடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.

முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறு பாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முட வேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு பாதுகாத்து வைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில் முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம் முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும் பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .

நாட்டுகோழிகளின் நல மேலாண்மை

நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்

கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.

7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .

குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்

      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.



தேவையான பொருட்கள்

      1. ஒரு பழைய பானை

      2. கிழிந்த கோணி/சாக்கு

      3. காய்ந்த சாணம்

      4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்



கரையான் உற்பத்தி செய்முறை


      மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

      ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.



கரையான் செயலாற்றும் முறை


      இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

      பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

      கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

      சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

நன்மைகள் 


      கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.

      அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?

      முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
      இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

லாபம் கொட்டும் தேனீ!

லாபம் கொட்டும் தேனீ!



வேளாண்மை என்றால், ஏர் பிடித்து உழுவது மட்டுமே என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பண்ணைசார் தொழில்களும் வேளாண்மைதான்.

இன்னும் சொல்லப்போனால் வேளாண்மைக்கு பலம் தரும் முக்கியமான துணையாற்றல் இந்தப் பண்ணைசார் தொழில்கள். அவற்றில் உழவர்களுக்கு நேரடியாகப் பயன் தரும் தொழில்களில் ஒன்று தேனீ வளர்ப்பு. ஒரு பண்ணையில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் அந்தப் பகுதியில் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெறும்.


தேனீ வளர்ப்பு குறித்து அரசு, தனியார்த் தொண்டு நிறுவனங்கள் உழவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றன. என்றாலும், பெரும்பாலான இடங்களில் பயிற்சி மட்டும் வழங்கப்படுகிறது, தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கப்படுவதில்லை. சில இடங்களில் பெட்டிகள் இருக்கும். ஆனால், அதில் எப்படி தேனீக்களை வளர்ப்பது என்ற பயிற்சியைப் பெறுவதற்கான சாத்தியம் இருக்காது.

இப்படியொரு சூழலில் தமிழகத்தில் முதன்முறையாக டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட வேளாண் உயிரினப் பன்மைக்கான‘பயோவர்சிட்டி இண்டர்நேஷனல்’ அமைப்பு, மதுராந்தகத்தில் உள்ள ‘க்ரீன்காஸ் ஃபவுண்டேஷன்’ எனும் உழவர்கள் மேம்பாட்டுக்கான அமைப்பு ஆகியவை இணைந்து, செப்டம்பர் 25-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம் கிராமத்தில் தேனீ வளர்ப்புக் குறித்த பயிற்சியை வழங்கியதோடு, அதற்கான பெட்டிகளையும் 25 உழவர்களுக்கு வழங்கியுள்ளன.

உணவோடு மருந்தாகவும்…


இந்தத் தேனீ வளர்ப்புப் பயிற்சியை, மதுரை வேளாண் கல்லூரி பூச்சியியல் துறைப் பேராசிரியர் சுரேஷ் வழங்கினார்.

“பலரும் தேனை ஒரு உணவுப் பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். அது, ஒரு மருந்துப் பொருளும்கூட. ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்தால், தங்கள் குடும்பத்துக்குத் தேவையான தேனை அவர்களாகவே தயாரித்துக்கொள்ள முடியும்.

தேனீ வளர்ப்பில் தேன் மட்டுமே கிடைப்பதில்லை. தேன் மெழுகு, அரச உணவு எனப்படும் ‘ராயல் ஜெல்லி’ ஆகியவையும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, தேனீயைக் கொட்ட வைத்து மூட்டுவலி நீக்குவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உயிரினப் பன்மையை வளர்ப்பது போன்ற மற்ற பயன்களையும் தேனீக்கள் தருகின்றன.

இப்படிப் பல பயன்களைக் கொண்ட தேனீ வளர்ப்புக்கு உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பாசன வசதி என எதுவுமே தேவையில்லை. பெட்டிகள் மட்டும் இருந்தால் போதும். தேனீக்கள் தானாகத் தேடி வரும்” என்றார்.

விளைவிப்பவர்களுக்கு விழிப்புணர்வு


மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ ஆகிய ஐந்து வகைத் தேனீ இனங்கள் இந்தியாவில் உள்ளன. எனினும், இவற்றில் இந்தியத் தேனீ மட்டுமே தேனீ வளர்ப்புக்கு ஏற்றதாக உள்ளது.

தேனீ வளர்க்க ஆரம்பித்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தேன் எடுக்க முடியும். ஒவ்வொரு முறையும் சுமார் 4 கிலோ அளவுக்குத் தேன் கிடைக்கும். இன்றைய சந்தை மதிப்பில் ஒரு கிலோ தேனுக்கு ரூ.500 விலை. அந்த வகையில் உழவர்களுக்கு இது கூடுதல் வருமானமாகவும் அமையும்.

“பொதுவாக, மழை நாட்களில் தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியே பறக்காது. காரணம் அவற்றின் இறகுகளில் மழைநீர் பட்டால், அவற்றால் பறக்க முடியாது. அதனால் அவை உணவு தேட முடியாது. உணவில்லையென்றால், அவை இறந்துவிடும். எனவே, மழைக்காலங்களில் அவை உணவுக்காகப் பெரும் பாடுபடும். அந்த நேரத்தில் நீரில் சிறிது சர்க்கரையைக் கலந்து பெட்டியில் வைக்கலாம். தேனீக்கள் அந்த நீரை உண்டு, தேனை வெளியேற்றும்.

ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான தேனீ வளர்ப்பாளர்கள், சர்க்கரை நீரையே தேனீக்களுக்கு முக்கிய உணவாகத் தருகிறார்கள். அதனால், அந்தத் தேனீக்களால் சுத்தமான தேனை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இன்றைக்குச் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான தேன், இப்படி கலப்படம் மிகுந்த ‘சர்க்கரை நீர்த் தேன்’தான். ஆனால், சுத்தமான தேனை வாங்கி உண்ண வேண்டும் என்கிற விழிப்புணர்வு சாப்பிடுபவர்களுக்கு வந்துவிட்டது. எனவே சுத்தமான தேனை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு, விளைவிப்பவர்களுக்கும் வர வேண்டும்” என்கிறார் பேராசிரியர் சுரேஷ்.

இன்றைக்கு உலகம் முழுவதும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதற்கான முக்கியக் காரணம் பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எப்போது நாம் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புகிறோமோ, அப்போது நம் நாவிலும் ‘இயற்கையான’ இனிப்பு நடனமாடும்!

விவசாயிகளுக்காக அரசுகள் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்காக அரசுகள் பல சலுகைகளை அறிவித்துள்ளது.


ஆனால் அந்த அறிவிப்புகள் பற்றிய முழு விவரங்களும் விவசாயிகளுக்கு சென்றடைவதில்லை.

அதன்படி பிரதமர; பயிர; காப்பீட்டுத் திட்டம் குறித்த தகவல்கள் பற்றியும் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.

இந்த திட்டத்தில் ஜூலை முதல் மார;ச் வரையிலான காலகட்டங்களை இரண்டு பருவங்களாக பிரித்து பயிர; காப்பீடு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் எந்தெந்த பயிர;களுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்புகளை மாவட்டம் வாரியாக வேளாண் அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர;.

தற்போது சம்பா பருவத்தில் நெற்பயிர; சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர;ந்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் நெற்பயிரிடும் விவசாயிகளுக்கு, எதிர;பாராமல் ஏற்படும் இழப்புகள் மற்றும் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் போன்ற காரணங்களுக்காக காப்பீடு வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பயிர;களுக்கு காப்பீடு பெற குறைந்த அளவு பீரிமியம் அதவாது 1.5 மூ தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பயிர;க்கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும், காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

விண்ணப்பிக்கும் முறை :


வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி அங்குள்ள காப்பீடு நிறுவன பிரதிநிதிகள் மூலம் விண்னப்பிக்கலாம்.

காப்பீடு பெற விண்ணப்பிப்பவர;கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார; அட்டை போன்றவைகளின் நகல் மற்றும் இரண்டு பாஸ்போர;ட் அளவு போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு காப்பீடு பெறுவதற்கு 30-ம் தேதி நவம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரிய காய்கறிகள், பழங்கள் வளர;க்க மானியம் :


அழிந்து வரும் பாரம்பரிய காய்கறிகள், சிறுபழ ரகங்களை விளைவிப்பதை ஊக்குப்படுத்த தோட்டக்கலைத்துறை தேசிய வேளாண் உற்பத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய் போன்ற நாட்டு காய்கறிகளில் சில ரகங்கள் அழியும் நிலையில் உள்ளன. நாவல், கொடிக்காய்புளி, சீத்தாப்பழம் போன்ற சிறு பழச்செடிகளை பயிரிடும் பரப்பும் குறைந்து வருகிறது.

எனவே இந்த ரகங்களை பயிரிடுவதை ஊக்கப்படுத்தி அழிவதிலிருந்து காப்பாற்ற தோட்டக்கலைத்துறை தேசிய வேளாண் உற்பத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்க உள்ளது.

அதன்படி கத்தரியில் பச்சை, சிவப்பு கத்தரி, வரி கத்தரி, நீள கத்தரி போன்ற நாட்டு ரகங்கள், தக்காளி, வெண்டை, மிளகாயில் உள்ள பல ரகங்களுக்கும், நாவல், கொடிக்காய்புளி, சீத்தாப்பழம் போன்ற சிறு பழ ரகங்கள் பயிரிடுவதற்கும் விவசாயிகள் பயிரிட எக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

அதுபோல நாட்டு வாழையில் முப்பட்டை ரகங்களை பயிரிடவும், வீட்டு தோட்டங்களில் மூலிகை வளர;க்க விரும்புவோருக்கு தோட்டக்கலைத்துறை பண்ணையிலிருந்து இலவசமாக கீழாநெல்லி, துhதுவலை, துளசி போன்ற மூலிகை நாற்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர; அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் :

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் :


1. மடி வீக்க நோய் (Mastitis)
2. வயிறு உப்புசம் (Bloat)
3. கழிச்சல்
4. கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease)
5. கோமார் கால் புண் (Foot lesions)
6. விட(ஷ)க்கடி

மடி வீக்க நோய் (Mastitis) :


* கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 


சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்),
மஞ்சள் பொடி-50 கிராம்,
சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)


மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம் (Bloat) :


கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் : 


வெற்றிலை-10 எண்ணிக்கை,
பிரண்டை-10 கொழுந்து,
வெங்காயம் -15 பல்,
இஞ்சி -100 கிராம்,
பூண்டு -15 பல்,
மிளகு-10 எண்ணிக்கை,
சின்ன சீரகம்-25 கிராம்,
மஞ்சள்-10 கிராம்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)


சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல் :


நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும்.

இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு :


சின்ன சீரகம் 10 கிராம்,
கசகசா 10 கிராம்,
வெந்தயம் 10 கிராம்,
மிளகு 5 எண்ணிக்கை,
மஞ்சள் 5 கிராம்,
பெருங்காயம் 5 கிராம்

ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease) :


கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 


தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது),
சீரகம் -50 கிராம்,
வெந்தயம் -30 கிராம்,
மஞ்சள் பொடி -10 கிராம்,
கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)


சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions) :


தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 


குப்பைமேனி -100 கிராம்,
பூண்டு-10 பல்,
மஞ்சள்-100 கிராம்,
இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)


முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

விட(ஷ)க்கடி :


விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 


உப்பு -15 கிராம்,
தும்பை இலை -15 எண்ணிக்கை,
சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை,
மிளகு-10 எண்ணிக்கை,
சீரகம் -15 கிராம்,
வெங்காயம்-10 பல்,
வெற்றிலை -5 எண்ணிக்கை,
வாழைப்பட்டை சாறு-50 மி.லி.

சிகிச்சை முறை :


சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்