Saturday, September 30, 2017

வேப்பமரம் பற்றிய தகவல்

வேப்பமரம் பற்றிய தகவல்




இந்த பூமியில் உள்ளே மரங்களில், மனிதனுக்கு அதிகம் பயன்படக்கூடிய மற்றும் நன்மை செய்யக்கூடிய ஒரே மரம் வேம்பு. தெற்கு ஆசியாவில் அதிகம் காணப்படும். தென் இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரம்.

அதனால் தான் திரு ஐயா நம்மாழ்வார் அவர்களால் போராடி நம் நாட்டிற்காக காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகள் உயிர் வாழும் தன்மை உடையது.முதல் இரண்டு வருடங்களுக்கு வேப்ப மரங்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். பிறகு வேகமாக இருக்கும். வறட்சி தாங்கி வளரும்.

அந்த காலத்தில் நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது இதன் குணங்களை கண்டு வியந்து,  இதனை அழிக்க நினைத்தாக  கூறப்பட்டது.

அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஊர் ஐயனார் கோயில் முன் புறம் அரசமரம் மற்றும் வேப்ப மரம் ஆகிய இரண்டு கன்றுகளை இனைத்து ஒன்றாக நட்டு விடுவர் .

இதன் காரணம் என்னவென்றால் அரசமரம் தொடர்ந்து ஆக்சிஜன் ஐ வெளியிடும். கசப்பான வேப்பம் காற்று பல நோய்களையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்திலேயே முன்னோர்கள் கண்டறிந்தனர்.

ஏனெனில் அந்த காலத்தில் அம்மை நோயினால் இறப்பு அதிகம். இப்போது உள்ளது போல் தடுப்பூசிகள் இல்லை. அதனால் இந்த தடுப்பூசிகள் வேலையை அந்த காலத்தில் வேப்ப மரம் செய்தது.

இந்த காலத்தில் கூட பொன்னுக்கு வீங்கி என்ற தாடையில் ஏற்படும் அம்மைக்கு வேப்பிலை மஞ்சள் இரண்டும் கலந்து அரைத்து பூசப்பட்டு வருகிறது.

மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கால்நடைகளுக்கு

குடல் புழு நீக்க மருந்தாக பயன்படுகிறது.கால்நடைகளுக்கு கோமாரி நோய்கள் மூலமாக ஏற்படும் புண் களுக்கு வேப்பெண்ணை சிறந்த மருந்து.

 வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் காற்று மனித உடலில் ஏற்படும் அனைத்து நுன்கிருமி களால் ஏற்படும் நோய்களையும் தடுக்க வல்லது. வேப்பம்பூ ரசம் பல நோய்களையும் தீர்க்க வல்லது.

இனி வரும் காலங்களில் முழுவதும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதால் வேப்பெண்ணை யின் பயன்பாடு இல்லாமல் பூச்சி விரட்டிகள் இல்லை.

வேப்பம்புண்ணாக்கு நைட்ரஜன் சத்து மிகுந்த இயற்கை உரம் மற்றும் அனைத்து வேர் நோய்களையும் தடுக்க வல்லது. வேம்பு இல்லாமல் இனி விவசாயம் இல்லை என்ற நிலை இப்போது வந்து விட்டது.

வேப்பம் தழைகளை வெட்டி சேற்றில் இட்டு அமிழ்த்தி அந்த வயலில் நெல் நாற்று நடும் போது இளம் வயதில் பயிர்களை தாக்கும் அனைத்து நோய்களும் கட்டுப்படும்.

இம் மரங்கள் இளவேனில் காலத்திலேயே இலைகளை உதிர்த்து விடுவதால் நல்ல நிழலாக இருக்கும். இந்த காய்ந்த வேப்பிலை மூலம் தாயாரிக்கப்படும் மண் புழு உரம் சிறந்த சத்து வாய்ந்தது.

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு விவசாயி ம் தன் வயல்கள் ஓரம் தனக்கென்று குறைந்த பட்சம் ஐந்து வேப்ப மரங்களையாவது வளர்க்க வேண்டி வரும். வேப்பெண்ணை யின் பயன்பாடு இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.

😁வேப்ப மரங்கள் வைரம் பாய்ந்த பின் வெட்டி அவற்றை வீட்டு வாசக்கால் மற்றும் கதவுகள் செய்ய பயன்படுத்தலாம் .வண்டு தாக்குதல் இருக்காது. சிலர் வீட்டு உபயோக பொருட்களை யும் செய்கின்றனர்.

😀சக்கரை நோய்க்கு தினமும் காலையில் சில கொழுந்துகளை பறித்து உண்பதன் மூலம் கட்டுபடுத்த லாம். கோழிகளில் ஏற்படும் அம்மைக்கு வேப்பிலை, மஞ்சள் இரண்டும் அரு மருந்து.

😁கண்டிப்பாக நகரங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு வேப்பமரம் வளர்க்க வேண்டும். காக்கை மற்றும் சில பறவைகள் விரும்பி வேப்ப மரத்தில் தான் கூடு கட்டும்.

😀மறக்கன்றுகள் பரிசளிப்பவர்கள் கண்டிப்பாக மற்ற கன்றுகளுடன் வேப்பங் கன்றுகளையும்  பரிசாக அளிக்கலாம்.இவற்றின் பழங்களை காக்கை கள் விரும்பி உண்பதால்  இம் மரங்கள் பரவுவதற்கு முக்கிய பங்களிக்கின்றன.

😁எல்லா நோய்களையும்கட்டுப்படுத்தும் இந்த வேப்ப மரங்களையும் சில நோய்கள் தாக்குகின்றன.

கூஸ் வாத்துகள் வளர்ப்பு

கூஸ் வாத்துகள் வளர்ப்பு




இவை ஐரோப்பிய நாடுகளை தாயகமாக கொண்டவை. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்தில் வெள்ளை நிற இனங்கள் அதிகமாக வளர்க்க படுகின்றன.

 இவை அழகு மற்றும் கறிக்காக வளர்க்கின்றனர்.     சிலர் ஒரு மாத குஞ்சுகள் வாங்கி வளர்க்க ஆரம்பிக்கின்றனர்.

ஆறு முதல் எட்டு மாதத்தில் பருவத்தை எட்டும். அதிக பட்ச எடை ஆறு கிலோ. ஒரு தடவைக்கு பத்து முட்டை வரை இடும்.

இனப்பெருக்கம் தண்ணீர் அடியில் நடைபெறும். சில சமயங்களில் தரையில்.

அடைகாலம் ஒரு மாதம். பெண் வாத்துகள் அடைகாக்கும்.ஆண் வாத்துகள் காவல் காக்கும். அந்த நேரத்தில் தீவனமும் சரியாக உண்ணாது. குஞ்சுகள் வளர்ப்பில் ஆண் வாத்துகளுக்கு அதிக பங்களிப்பு உண்டு.

புல் பூண்டு களை விரும்பி சாப்பிடும். அடர் தீவனமும் கண்டிப்பாக அளிக்க வேண்டும் அதாவது தாது உப்பு கலந்தது.

சில சமயங்களில் நோய்கள் தாக்கு கின்றன.கோழிகளை தாக்கும்  நோய்கள் இவற்றை தாக்கும் ஆனாலும் சில சமயங்களில் மட்டுமே. தடுப்பூசி போடுவது சிறப்பு.

நெல் வயல்களில் முளைக்கும் புற்களை இவை சாப்பிடும். அதேசமயம் இளம் பயிர்கள் சேதமாக வாய்ப்பு.  பயிர்  வளர்ந்த பின்னர் விடலாம்.

இவை வளரும் பண்ணைகளில் புதிய ஆட்கள் நுழைந்தால் பெரிதாக சப்தம் எழுப்பும் சில சமயங்களில் கொத்த வரும். மனிதர்கள் அசைவை நன்கு புரிந்து கொள்ளும்.

நெல் போன்ற தானியங்களை விரும்பும். அறுவடை செய்யும் நெல் வயல்களில் சிந்தும் மணிகளை தேடி உண்ணும். 

மாதிரி தீவன மேலாண்மை


சீத்தா மரம் பற்றிய தகவல்கள்

சீத்தா மரம் பற்றிய தகவல்கள்



ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தது. சாதாரணமாக வறட்சி்  தாங்கி வளரும் தன்மை உடையது. குற்று மரங்களாக வளரும்.

இம்மரங்களை மலைகளை ஒட்டிய பகுதியில் அதிகம் பயிரிட படுகிறது. சமவெளி  யில் பயிர் செய்வது மிக குறைவு .

இவற்றிற்கு உரம் எதுவும் கொடுப்பது இல்லை. ஒரு வேளை சமவெளி யில் பயிரிட்டால் குறைந்தது பதினைந்து அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒட்டு கன்றுகள் இரண்டு வருடங்களில் காய்ப்புக்கு வரும்

விதை மூலம் வரும் கன்றுகள் மூன்று வருடங்களுக்கு பிறகு பூக்க ஆரம்பிக்கும். அதாவது சித்திரை மாதம் முதல் பூக்கள் தோன்றும். ஆவணி மாத இறுதி  முதல் பழங்கள் கிடைக்கும்.

இதன் தழைகளை ஆடு மாடுகள் கடிக்காது அதனால் பெரிய பாதுகாப்பு ஒன்றும் தேவை இல்லை. சில நேரங்களில் பறவைகள் மூலம் பழங்களுக்கு பாதிப்பு வரலாம்.

அதனால் செங்காய் களை அறுவடை செய்து வைக்கோல் மூடி ஒரு அறைக்குள் வைத்து விட்டால் பழுத்து விடும்.

தூரத்து சந்தைக்கு அனுப்பும் போது செங்காய் களை அப்படியே அனுப்பி விட்டால் பழங்கள் சேதம் ஆகாது. அங்கு செல்வதற்குள் பழுத்து விடும். சிறு மூங்கில் கூடைகள் அல்லது பிளாஸ்டிக் டிரேக்களில் அடைத்து அனுப்பலாம்.

புற்று நோய் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கூறுவதால் கண்டிப்பாக இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம்.

சிலர் இயற்கை முறை பூச்சி விரட்டி தயாரிக்க இவற்றின் இலைகளை பயன்படுத்து கின்றனர். இதன் தழைகளை நெல் வயலில் சேற்றில் இட்டு இயற்கை முறை யில் சாகுபடி செய்தால் நல்ல மகசூல் வரும். 

பொன்னீம் - இயற்கை பூச்சிக்கொல்லி

பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:



அசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.

நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.

முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயிலை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கலாம்.

இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும்.

தயாரிக்கும் முறை

இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானதாகவே இருக்கிறது. வேப்ப எண்ணெய் 45%, புங்கன் எண்ணெய் 45%, சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால் உடனடியாக பொன்னீம் தயார்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும் மிண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றறை லிட்டர் வரை தேவைப்படும்.
பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

அசுவினி:

இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த் துளைப்பான்:

தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புழு:

இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப் புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்தது போல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.



பொன்னீம் தயாரிப்பது எப்படி: 45% வேப்ப எண்ணெய், 45% புங்க எண்ணெய் இரண்டையும் 10% சோப்புடன் கலக்கவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும். மீண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லிட்டர் வரை தேவைப்படும்.

படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும். நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.
முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயிலை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கலாம். இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும்

Friday, September 29, 2017

நீர் மேலாண்மை - புதிய வழி

நீர் மேலாண்மை






கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவும் வறட்சியால், அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படும் பகுதிகளான கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகி மொட்டையாக நிற்கின்றன. தண்ணீர் வளம், தென்னைக்கான தட்பவெப்பச் சூழல் உள்ள இப்பகுதிகளிலேயே தென்னைக்கு இந்த நிலையென்றால், தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தென்னை மட்டுமல்ல மா, கொய்யா, மரப்பயிர்கள் என அனைத்துக்கும் இந்த நிலைதான்.



இப்படி இயற்கை சொல்லிக் கொடுத்த பாடத்தால், நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகச் சிக்கன பாசன முறைகளை விவசாயிகள் தேட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், நேரடியாக வேருக்குப் பாசனம் செய்யும் முறையை வடிவமைத்திருக்கிறார், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி வரும் சத்யகோபால் ஐ.ஏ.எஸ். இவரது தொழில்நுட்பத்துக்காகக் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. அதோடு இத்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் பரவலாக்க வேண்டும் என வேளாண்மைத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இத்திட்டத்தை வடிவமைத்த சத்யகோபாலைச் சந்தித்துப் ‘பசுமை விகடன்’ சார்பில் வாழ்த்துகளைச் சொன்னோம். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட சத்யகோபால், “நான் விலங்கியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவன். நீர் மேலாண்மை மற்றும் மரங்கள் வளர்ப்பில் ஆர்வம் உடையவன். விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனப்படுத்தத் தற்போது சொட்டு நீர்ப் பாசனத்தையே பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வறட்சி குறைந்தபாடில்லை. அதற்காகத்தான் பயிருக்கு நேரடியாக நீர் பாய்ச்சும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தேன். இத்தொழில்நுட்பத்தின்மூலம் 60 சதவிகிதம் நீரை மிச்சப்படுத்தலாம். இத்தொழில் நுட்பத்தைக் கடைபிடிக்கும்போது கன்றுகள் மிக வேகமாக வளர்கின்றன. இத்தொழில்நுட்பத்தை மதுரை, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தி இருக்கிறோம். புதிய கன்றுகளுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்த மரங்களுக்கும் கூட இத்தொழில்நுட்பம் தண்ணீர்ச் சிக்கனத்துக்குக் கைகொடுக்கும்” என்றவர் தனது தொழில்நுட்பம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.



“இரண்டு அடி சதுரம், இரண்டு அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். குழியின் மையப்பகுதியில், குழி தோண்டும் கருவி அல்லது கடப்பாரை மூலம் மேலும் ஓர் அடி அளவில் துளை போலக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மையத் துளையில் தலா இரண்டு கைப்பிடியளவு சலித்த மண்புழு உரம் அல்லது எரு இட்டு, ஆற்று மணல் கொண்டு நிரப்பி விட வேண்டும்.

அடுத்து குழியின் நான்கு முனைகளிலும் நான்கு அங்குல விட்டம் கொண்ட பி.வி.சி குழாய்களை நிறுத்தி வைத்துத் தோண்டிய மண்ணுடன் தேவையான அளவு சலித்த மண்புழு உரம் அல்லது எரு கலந்து குழியை நிரப்ப வேண்டும். பிறகு குழியின் மையத்தில் சிறிய பள்ளம் தோண்டி அதில் இரண்டு கைப்பிடி அளவு சலிக்காத மண்புழு உரத்தைப்போட்டு மரக் கன்றை நடவுசெய்ய வேண்டும். அடுத்து நான்கு பி.வி.சி குழாய்களுக்குள்ளும் தலா இரண்டு கைப்பிடி அளவு சலித்த மண்புழு உரம் அல்லது எருவை இட வேண்டும். அதற்கு அடுத்த அடுக்காக இரண்டு கைப்பிடி ஆற்று மணல் அல்லது செறிவூட்டப்பட்ட தேங்காய் நாரை இட வேண்டும். அடுத்த அடுக்காக 50 கிராம் அளவு உயிர் உரத்தை இட வேண்டும். பிறகு பிவிசி குழாய்களை உருவி விட்டுக் மரக்கன்றைச் சுற்றித் தண்ணீர் ஊற்ற வேண்டும். தென்னை, மா, கொய்யா, சப்போட்டா என அனைத்துப் பயிர்களையும் இப்படி நடவுசெய்ய முடியும்” என்ற சத்யகோபால் நிறைவாக,


“இப்படி நடவு செய்துவிட்டால், ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும், நான்கு மூலைகளிலும் உள்ள உரக்கலவையின் வழியாகத் தண்ணீர் எளிதாக ஊடுருவிச் செல்லும். அதனால், வேரின் அருகே உள்ள மண்ணில் நீர்ப் பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். பயிருக்கு ஊட்டம் கிடைத்துக்கொண்டே இருக்கும். சொட்டு நீர் அமைப்புமூலம் பாசனம் செய்யும்போதும் இம்முறையைப் பயன்படுத்த முடியும்” என்றார்.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சி.மௌனகுருசாமியிடம் பேசினோம். “ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, எங்க பகுதியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கூட்டம் போட்டு, இந்தத் தொழில்நுட்பம் பத்திச் சொன்னாங்க. அதோட செயல் விளக்கமும் காட்டினாங்க. அதை என்னோட தோப்புல இருக்குற 200 தென்னை மரங்கள்ல செயல்படுத்திப் பார்த்தேன். ஏற்கெனவே நடவு செஞ்சு பதினஞ்சு வயசான மரங்கள் எல்லாம். ஒவ்வொரு மரத்தைச் சுத்தியும் நாலு மூலைகள்ல துளை போட்டு பி.வி.சி குழாயைச் செருகி மணல், தொழு உரம், செறிவூட்டப்பட்ட தென்னைநார்க் கழிவு மூணையும் அடுக்கடுக்கா நிரப்பிக் குழாய்களை உருவிட்டேன். இப்படிச் செஞ்சு தண்ணீர் பாய்ச்சுறதால மரங்கள் எப்பவும் பசுமையா தளதளனு இருக்கு. அதோட தண்ணீர் தேவையும் மிச்சமாகுது. இப்போ தண்ணீர்ப் பற்றாக்குறையால வழக்கமா கொடுக்குற தண்ணீர் அளவுல பாதிகூடக் கொடுக்க முடியலை. ஆனாலும், மரங்கள் பசுமையா இருக்கு. கன்னு நடவு செய்யும்போதே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திட்டா இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்” என்றார்.  

இதே பகுதியைச் சேர்ந்த பி.கே.செல்வராஜ், “என்னோட தோப்புல காய்ப்புல இருந்த கொஞ்ச தென்னை மரங்கள் காய்ஞ்சு போச்சு. அதனால அந்த மரங்களை வெட்டிட்டுப் புதுசா கன்னுகளை வெச்சேன். நடவு செய்யும்போதே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் நடவு செஞ்சேன். நடவு செஞ்ச கொஞ்ச நாள்லயே சுத்தமா கிணத்துல தண்ணி இல்லாமப் போயிடுச்சு. மழையும் இல்லை. ஆனாலும், ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் பாசனம் இல்லாத நிலையிலயும் மூணு மாசம் வரைக்கும் கன்னுகள் பசுமையா இருந்துச்சு. இப்போ, கொஞ்சம் மழை கிடைச்சதுல அருமையா வளருது. எல்லா மரப்பயிர்களுக்கும் இதைக் கடைபிடிச்சா கண்டிப்பா தண்ணீர்த் தேவையைக் குறைக்க முடியும்” என்றார்.

பஞ்சகவ்யாவால் பலன் கூடும் 

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, “ நான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு துளையிலயும் 10 மில்லி பஞ்சகவ்யாவை ஊத்தி விட்டேன். மணல், தொழு உரம், தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்தலை. அதோட, தொடர்ந்து பாசனத் தண்ணீர்லயும் பஞ்சகவ்யாவைக் கலந்து விட்டேன். அதனால, குரும்பை உதிர்றது நின்னு நல்லா காய்பிடிக்கிது” என்கிறார்.விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு

திருப்பூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனர் எம்.தமிழ்செல்வன், “தென்னை மரங்கள் அதிகம் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம் பகுதி விவசாயிகள் மத்தியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முன்னோடி விவசாயிகளின் தென்னை மரங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி மாதிரிப் பண்ணைகளாக மாற்றி, மற்ற விவசாயிகள் அவற்றைப் பார்வையிட ஏற்பாடு செய்கிறோம்” என்றார்.

அரிசி

நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருள் அரிசி.





 காலங்காலமாக நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வர இன்றைய தலைமுறையினரோ அதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது.


அது சாப்பிடக்கூடாது உடல் நலத்திற்கு தீங்கானது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அரிசியில் அத்தனை சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

அதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.


புழுங்கல் அரிசி : 


புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும்.

 அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் போதுமானது.


பச்சரிசி :

உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.

ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.


சிகப்பரிசி :

சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது.

 இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது.

மேலும் சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.


பாஸ்மதி அரிசி : 

மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது.


மூங்கில் அரிசி : 

மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.


மாப்பிள்ளை சம்பா : 

இந்த வகை அரிசியில் புரதம், நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இதை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.


சீரகச் சம்பா: 


இந்த வகை அரிசி இனிப்பு சுவையுடையது. அதனால் அதிகமாக சாப்பிடத்தூண்டும். சிறுவாத நோய்களை தீர்க்க வல்லது இது.


தினை அரிசி : 

இது ரத்த சோகையை அகற்றக்கூடியது. அத்துடன், காய்ச்சல் சளித்தொல்லை இருந்தால் அதன் வேகத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு. இதற்காக அதிகமாக எடுத்துக்கொண்டால் அது பித்தமாகவும் மாறிடும்.


மருந்தாகும் அரிசி :


 வயிற்றுக்கடுப்பு, குடல் வறட்சி இருப்பவர்களுக்கு அரிசி உலையில் கொதிக்கும் போதே ஒரு டம்ளர் நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

 அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணை அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் விரைவில் குணமாகும்.


யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ?


சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளை குறைத்து உண்ணலாம்.


அரிசி உணவில் இருக்கும் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே ரத்தத்தில் சேர்ந்திடும்.

 இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இவர்கள் செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிற சாமை,தினை போன்றவைகளை எடுக்கலாம்.


அரிசி சாதம் இரவுகளில் சாப்பிடக்கூடாதா?


நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும்.

 இதனால் அரிசிகளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நம் உடலின் சக்தியாக சேரும்

 ஆனால் இரவுகள் வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக சேரும், அதனால் இரவு உணவுகளில் அரிசி உணவை தவிர்ப்பது நலம்.

அரிசி உணவு என்பது சத்தான உணவு தான்.

ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் அது தவறானதாக முடிகிறது.

அதனால் அரிசி உணவை முற்றிலுமாக தவிர்க்காமல் உங்கள் உடலின் தேவையறிந்து சாப்பிடுங்கள்.

முட்டைகளை அடை வைக்க எளிய வழி

முட்டைகளை அடை வைக்க எளிய வழி




கோழிகள் இடும் முட்டைகளை சேகரித்து அவற்றை ஈர துணி கொண்டு துடைத்து வைப்பது சிறந்தது.

குளிர் சாதனபெட்டியில் சேமிக்கும் போது பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதாவது அடை வைப்பதற்கு ஏற்றார் போல்.உண்பதற்கு பதினைந்து நாள் முட்டைகளை கூட பயன்படுத்தலாம்.

ஈர மணலில் துணியை போர்த்தி அதன் மீது முட்டைகளை வைப்பது மூலம் ஒரு வாரம் வரை கெடாமல் அடை வைக்கலாம். உப்பு சட்டியில் சேமிப்பது மூலமும் ஒரு வாரம் பாதுகாக்க லாம். ஏனெனில் உப்பில் உள்ள ஈரப்பதம் முட்டைகளை பாதுகாக்கும்.

குளிர் காலங்களில் பத்து நாட்கள் வரை தாங்க வாய்ப்பு. அடை வைப்பதற்கு முன் தண்ணீர் ல் இட்டால் மிதக்காமல் கிடைமட்டமாக இருந்தால் நல்ல முட்டை.

அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்ற வற்றின் மீது வைப்பது விட லேசான ஈர மணல் மீது வைப்பது அதிக பொரிக்கும் தன்மை மற்றும் பேன் போன்ற ஒட்டுன்னிகள் தாக்காமல் இருக்க வாய்ப்பு


ஒரு கோழி முதலில் இடும் இரண்டு முட்டைகள் மற்றும் கடையில் இடும் ஒரு முட்டை யை அடை வைப்பது தவிர்க்கலாம். ஏனெனில் இவற்றிற்கு குஞ்சு பொரிக்கும் தன்மை குறைவு. அதாவது சேவல் களின் விந்து அனுக்களின் வீரியம் இந்த முட்டைகளில் குறைவு.

சற்று நீளமான முட்டைகள் சேவல் முட்டைகளாகவும் உருண்டை யாக இருக்கும் முட்டைகள் பெட்டைகளாக பொரிகக அதிக வாய்ப்பு.

சிறிது மஞ்சள் தூள் மற்றும் துளசி இலை சாறு இவை கலந்த தண்ணீர் ல் முட்டைகளை முக்கி எடுத்து அடை வைப்பதன் மூலம் கரு கலையாமல் முட்டைகள் பொரிக்கும்.

பன்னிரண்டு முட்டைகளுக்கு மேல் ஒரு கோழி ன் கீழ் அடைவைக்க கூடாது. ஏனெனில் அதற்கு அதிகமானால் கோழியின் உடல் வெப்பம் முட்டைகளுக்கு அதிகம் படாது.

கோழிகளை கோடைகாலத்தில் அடை வைக்கும்போது கண்டிப்பாக அந்த முட்டைகளுக்கு பக்கத்தில் ஒரு இரும்பு ஆணி யை கண்டிப்பாக வைக்க வேண்டும். அது இடி தாங்கி போல் செயல் படும்.

இரண்டு காய்ந்த மிளகாய்களை முட்டைகள்  அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுன்னிகள் கோழிகளை தாக்காது. 

வட இந்திய மாடுகள் வாங்கும் தோழமைகள் கவனத்திற்கு

வட இந்திய மாடுகள் வாங்கும் நினைக்கும் / வாங்கப் போகும்
தோழமைகள் கவனத்திற்கு...!!!




இன்று நம்மில் பல தோழர்கள் வட இந்திய மாடுகளான கிர், காங்ரேஜ், சாஹிவால், தார்ப்பாக்கர் போன்ற இனங்கள் மேல் மோகம் கொண்டு அவைகளை வாங்கி வளர்க்க ஆசை படுகின்றோம்.

இந்த தருணத்தை சில உள்ளூர் வியாபாரிகள் தவறாக பயன்படுத்தி தரமற்ற மற்றும் கலப்பினங்களை அதிக விலைக்கு விற்று பணத்தை ஈட்டகின்றனர் மனசாட்சி இல்லாமல்.

இன்று நம்ம தமிழகத்தில் மனசாட்சியுடன் நியாயமான முறையில் ஒரு சிலரே வியாபாரிகளே உள்ளனர்.

நம்ம விஷயத்திற்கு வருவோம் எனது சொந்த மற்றும் எனது நெருங்கிய பல நண்பர்களின் வட இந்திய மாடுகள் வளர்ப்பின் அனுபவ ரீதியான பகிர்வே:-

கட்டாயமாக ஒன்று இரண்டு வடமாநில மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என ஆசை இருப்பவர்கள் கட்டாயம் அந்த எண்ணத்தை கைவிடுங்கள்.

ஏனென்றால் முதல் பிரச்சனை இனச்சேர்க்கை செய்வதில் உருவாகிறது. பெரும்பாலும் நாட்டு மாடுகள் செயற்கை கருத்தலித்தலால் சினை பிடிப்பதில்லை.
இதனால் மாடு சினை பிடிப்பது தள்ளிப்போய் கன்று ஈனும் இடைவெளி 1.5 - 2 ஆண்டுகள் ஆகிறது. அப்படியென்றால் நான் மூன்று மாடுகளிற்கு ஒரு காளை மாடு வைத்துக்கொள்கிறேன் எனலாம். காளை மாடுகளை அதிமாக இனச்சேர்க்கைக்கு பயன்படுத்த வேண்டும் மற்றும் அடுத்த பருவத்திற்கு அதே காளையை பயன்டுத்தாமல் வேறு காளையை தான் பயன்படுத்த வேண்டும்.

பெரும்பாலும் வட இந்திய மாடுகள் சுதந்திரமாக உலாவுவதையும் கூட்டமாக இருப்பதை விரும்புகிறது. நாம் கட்டிவைத்து வளர்ப்பதால் அவை மனதளவில் பலவினமாக காணப்படுகிறது. இதனால் சரியாக தீவனம் எடுப்பதில்லை, குறைவாக பால் தருதல், சினை பிடிப்பது தள்ளி போதல், சாதுவாக இல்லாது போதல் மற்றும் பால் கறவைக்கு விடுவதில் சிரமம் என பல இன்னல் ஏற்படுகிறது.

வடநாட்டு மாடுகள் ஈனும் கன்றுகள் கிடாரியாக இருந்தால் பராவாயில்லை காளையாக இருக்கும் போது அவைகளை நாம் வளர்க்க முற்படுவதில்லை அதை வெட்டுக்கே குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

அது போல கிர், காங்ரேஜ் & தார்பார்க்கர் இனங்களிலும் பல உள்ளூர் இனங்களில் கலந்து சில மாடுகள் கலப்பாக காணப்படுகிறது.

பல வடஇந்திய மாடுகள் உண்ணும் உணவு அதிகமாகவும் அது தரும் பால் அளவு குறைவாகவும் காணப்படுகிறது. அதனால் பலர் வெறுப்புக்கு தள்ளப்படுகிறோம். எனவே மேய்ச்சல் நிலமோ / பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அளவில் சொந்த நிலம் வேண்டும். கட்டாயமாக அசோலாவையும் & ஹைட்ரோ போனிக்கையும் நம்பி மாடுகளை தயவு வாங்கி வளர்க்க முற்படாதீர்கள்.

எனக்கு தெரிந்து வட இந்திய மாடுகள் 10 எண்ணிக்கைக்குள் வைத்துக்கொண்டு தீவனம் வெளியில் வாங்காமல் தங்கள் நிலத்திலேயே தயார் செய்தும் & அதிகமாக வேலையாட்களை வைத்துக்கொள்ளாமல் சொந்தமாக / நேரடியாக பால் வியாபாரத்தில் ஈடுபடுவர்களே லாபம் சம்பாதிக்கிறார்.

95% பேர் பெரிய அளவில் செய்ய முற்பட்டு பால் விற்பனை அளவை உயர்த்த எண்ணி மாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தி கிடைக்கும் சொற்ப லாபத்தையும் இழந்து நஷ்டமடைகிறார்கள்.

தயவு செய்து வடஇந்திய நாட்டு மாடுகளை வாங்கும் முன் அதன் சாதகமான பால் அளவை மட்டும் பார்த்து வாங்காதீர்கள் & அதன் பாதங்களை அலசி ஆராய்ந்து வாங்குங்கள்.

அது போல வடஇந்திய மாடுகள் அனைத்தும் சீராக பால் தருவதில்லை. அதாவது வேளைக்கு வேளைக்கு பால் அளவு கூடியோ குறைந்தோ காணப்படுகிறது.

உதாரணத்திற்கு 10 லிட்டர் பால் கறக்கும் கிர் மாடு கன்று ஈன்று 2-3 மாதங்களே அதே அளவு கறக்கும். பின்பு 7-4லிட்டர் 4-6மாதங்களுக்கு தரும் பின்பு திடீரென 1-2 லிட்டருக்கு வந்துவிடும் சில மாடுகள் பாலே தராது. இதில் 10% மாடுகளே கொஞ்சம் கூடுதலான பாலை தருகிறது.

கடந்த 2-3 மூன்று மாதங்களாக வடக்கில் இருந்து வரும் மாடுகள் வரும் பல வண்டிகள் மடக்கப்பட்டு மாடுகளை பறிமுதல் செய்கிறார்கள். மாதம் நான்கு முதல் ஐந்து வண்டிகளுக்கு மேல் மாட்டிக்கொள்கிறது.

ஆதலால் தற்போது வடக்கில் சென்று மாடு வாங்கும் எண்ணத்தை கைவிட்டுவிடுவது சிறப்பு.

நமது தமிழக நாட்டு இனங்களை வாங்கி வளர்க்க முற்படுவது சிறந்தது

பெரும்பாலும் நமது தமிழக இனங்கள் வருடத்திற்கு ஒரு கன்று ஈனுகிறது.

பொலிக்காளைகள் நமது பகுதியிலேயே கிடைக்கிறது.

தமிழக இனங்களில் திருவண்ணாமலை பகுதியில் துரிஞ்சல் இனமாடுகள் விலை குறைவாகவும் பால் அளவு 5-7 லிட்டர் வரை பால் தருகிறது மற்றும் நல்ல மேய்ச்சல் எடுக்கிறது. இவை பெரும்பாலும் அடர்தீவனத்தை விரும்புவதில்லை.

அது போல கொங்க மாடுகள் கோவைக்கு மேற்கே காணப்படுகிறது இவையும் மேய்ச்சல் மட்டுமே மேய்ந்து 5-6 பாலை நாள் ஒன்றுக்கு தருகிறது.

அது போல புலிகுள மாடுகள், கம்பீரத்திற்கு பெயர் போன காங்கேய இனமாடுகள் இவை சராசரியாக 4 லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு தருகிறது.

மற்றும் உம்பளசேரி, ஆலம்பாடி, செம்மறை, பர்கூர், மணப்பாறை, வடக்கரை & தென்கரை மாடுகள் என உள்ளூர் இனங்கள் காணப்படுகிறது.

என்னுடைய அனுபவத்தை பொருத்தவரை வடஇந்தியா மாடுகளை வாங்கி வளர்ப்பது ஒரு மோகமே. இதை பயன்படுத்தி பல வியாபாரிகள் நம்மை ஏமாற்றுகின்றனர்.

வடஇந்திய மாடுகளை தமிழகத்தில் வாங்கும் போது எவ்வெவ்வாறு ஏமாற்றப்படுகிறோம்:-

விலையில் அதாவது 40-70% லாபம் வைத்தே பலர் வட இந்திய மாடுகளை விற்கின்றனர். இதில் சொற்ப வியாபாரிகளே விதிவிலக்கு. கட்டாயமாக அவர்கள் கூறும் விலையில் 40% கீழ் விலை கேளுங்கள் மற்றும் இந்த விலைக்கு வாங்கலாமா என தெரிந்த குழுவில் பகிருங்கள். கட்டாயமாக சினையை, மாட்டின் தரத்தை & பால் கறவையை உறுதி செய்த பின்னரே பணத்தை பரிமாற்றம் செய்யவும்.

பல வியாபாரிகள் விற்கும் வடஇந்திய இனத்தில் 100% Pure இல்லை ஆனால் குறைந்த விலை கிடைக்கிறது எனத்தெரிந்தே வாங்கி வந்து பொய் கூறி இரட்டிப்பாக விற்கிறார்கள். கட்டாயம் மாட்டின் புகைப்படத்தை பல குழுவில் பகிர்ந்த பின்னரே வாங்குவது சிறப்பு அவசரம் தேவையில்லை.

பால் அளவு பலர் ஏமாற்றப்படுவது இதில் தான் கட்டாயமாக நீங்கலே குறைறைந்து இரண்டு/மூன்று நேரம் கறந்து பார்த்து வாங்கிச்செல்லவும்.

கட்டாயமாக அறிமுகம் இல்லாத / அனுபவம்  நபர்களிடம் மாடுகளை நம்பி வாங்கி ஏமாறாதீர்கள்.

பலர் வடக்கே நாங்க மாடு வாங்கச்செல்கிறோம் முன்பணம் தாருங்கள் என அறிமுக இல்லாத நபர்களிடம் பணத்தை தந்து ஏமாறாதீர்கள். மற்றும் எந்தவொரு தெரியாத வியாபாரியிடம் பணத்தை தந்து ஏமாறாதீர்கள்.

இரண்டு மாதத்திற்கு முன் வடக்கே சென்று  தட்டுதடுமாறி கலப்பினத்தை சொந்த தேவைக்கு வாங்கி வந்தவர்கள் எல்லாம் வியாபாரி என்ற போர்வையில் உறுவெடுத்துள்ளனர்.

நான் கூறியதையெல்லாம் பொருட்படுத்தாதவர்கள் வடக்கே சென்று மாடு வாங்கி வரும் போது கட்டாயமாக மாடுகளிற்கென இயங்கும் வாகனங்களை பயன்படுத்தவும்.

விதிமுறைகளை மீறி அதிமான மாடுகளை ஏற்றி வராதீர்கள்.

கட்டாயம் 100% அனைத்து தரப்பு அனுமதிகளை முறையாக பெற்ற பின்னரே மாடுகளை வண்டியில் ஏற்றவும்.

வண்டிக்கு 30% தொகைக்கு மேல் முன் பணம் தரவேண்டாம்.

கட்டாயமாக மாடுகள் பார்க்கும் கைதேர்ந்த நபர் ஒருவரை வண்டியில் மாடுகளை பார்த்துக்கொள்ள அமர்த்திகொள்ளுங்கள்.

மற்றும் மாடுகளிற்கு 10நாட்களுக்கு தேவையான தீவனம் & முதலுதவி மருந்துக்களை வண்டியில் வாங்கி ஏற்றிக்கொள்ளுங்கள். கட்டாயமாக வண்டி தினமும் இரவில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும்.

அது பல வியாபாரிகள் முழு வெள்ளையாக இருக்கும் மாட்டை தார்பாக்கர் என்றும், காது பெரிதாக உள்ள மாட்டை கிர் என்றும், கொம்பு பெரிதாக உள்ள மாட்டை காங்ரேஜ் எனவும், உயரம் குறைவாக & சிறிய கொம்புடன் உள்ள மாட்டை சாஹிவால் என்றும் பொய் உரைத்து விற்பனை செய்கின்றனர்.

முக்கிய குறிப்பு: 

தயவு செய்து எந்த நாட்டு மாடுகளாக இருந்தாலும் வாட்ஆப் குழுவில் பகிர்ந்து ஆலோசனை பெற்றே வாங்கவும். கட்டாயமாக பால் விஷயத்தில் ஏமாறாதீர்கள் இரண்டு வேளையாவது கறந்து பார்த்து வாங்கவும். கட்டாயம் நீங்கள் கறந்து பார்க்கும் பால் அளவுக்கு கீழ் குறையுமோ தவிற மேல் கூடாது.

நாட்டு மாடு வாங்கும் போது யாரும் ஏமாறாதீர்கள் / ஏமாற்றாதீர்கள் அதுவே பெரும் புண்ணியம்.


இந்த கருத்துக்கள் அனைத்தும் 100% எனது உண்மையான மற்றும் எனது நெருங்கிய நண்பர்களிடையே நான் கண்ட / பார்த்த அனுபவ பகிர்வே.

நியாமான முறையில் நாட்டு மாடுகளை வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நாம் என்றுமே நண்பர்களே.