Saturday, August 24, 2019

அனுபவ கட்டுரை - முதல் படி : தமிழர் கூட்டு வேளாண் பண்ணையில் என்னும் குழுவில் இணைப்பு..


வணக்கம்,

முந்தைய பதிவில் நான் யார் எதற்காக இந்த தளம் என்பதை பதிவிட்டேன், நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.. அறியாதவர்கள் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.. 


கம்ப்யூட்டர் சம்பந்தமான மாஸ்டர் டிகிரி படித்து முடித்தவுடன் பல நல்ல வெளிநாட்டு வேலைகள் கிடைத்தன.. அதில் பணிபுரியும் அனுபவமும் கிடைத்தது. ஒரு 6 வருடம் அப்படியே சென்ற போதிலும் என்னுள் ஏதோ ஒரு குறை.. 

அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் இல்லை.. அதனால் என்னவோ விவசாயம் மிகவும் பிடித்து போனது. மேலும் பணம் வரவும் அதிகரித்தது.. சரி,  சேமிப்பை விவசாயம் சம்பந்தமான துறையில் முதலீடு செய்ய நினைத்தேன்..

இதை பற்றி நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது என் நண்பர் ஒருவர் ஒரு whatsapp குரூப் அறிமுகம் செய்தார்.. அந்த குரூப்ல் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.. இயற்கை விவசாயம் பற்றிய புரிதல் கொண்ட குரூப்.. பல நண்பர்கள் அறிமுகம்.. அந்த குரூப் பற்றி அறிந்து கொண்டேன்.. அந்த குரூப் பெயர் "தமிழர் கூட்டு வேளாண் பண்ணை".

அந்த அமைப்பின் நோக்கம் "தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்துவரும் தலைமுறை விஷமற்ற உணவினை உண்ண தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு விநியோகம் செய்வது. இயற்கை விவசாயத்தின் மேன்மைகளை அனைவருக்கும் எடுத்துரைத்து, தமிழகம் முழுவதும் பல பண்ணைகளை உருவாக்குவது மற்றும் பலரை உருவாக்க வைப்பது. வலிமை மிகுந்த தமிழகத்தை ஒரு தற்சார்பு மாநிலமாக மாற்றி உலகுக்கே முன்னோடி தமிழன் என்பதை நிரூபிப்பது."



இந்த அமைப்பின் மூலம் இயற்கை விவசாயம் மீது ஆர்வம் மிகுந்தது.. கிட்ட தட்ட ஒரு வருடம் இந்த அமைப்பில் இணைந்து பல ஒருமித்த கருத்து கொண்ட நண்பர்களை இணைத்தேன்.. ஒரு கலந்தாய்வு கூட்டம் கூட தமிழகத்தின் இதயம் திருச்சியில் நடத்தினோம்.. ஆனால் காலம் செல்ல செல்ல நண்பர்களிடம்  ஒருமித்த கருத்து மாறிப்போனது.. அமைப்பும் காற்றிலே கரைந்து போனது.. இதயம் பட்ட வழிகளை எழுத்தில் சொல்ல இயலாது..

மேலும் இணைந்துருங்கள் என்னுடன் என் அனுபவங்களுடன்..

நன்றி ,
முதல் தலைமுறை விவசாயி..

No comments:

Post a Comment