நாட்டு எருமை பற்றிய தகவல்கள்
அந்த காலத்தில் விவசாயிகள் பயிரிட்ட இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்தது இந்த நாட்டு எருமைகள் சாணம் மற்றும் கோமியம் தான்.
கால்நடைகளில் அதிக சத்து நிறைந்த சாணம் மற்றும் கோமியம் இந்த நாட்டு எருமை களுடையது தான். இதன் மூலம் தயார் செய்யும் மண்புழு உரம் நல்ல தரம் வாய்ந்தது. மற்றும் சத்து நிறைந்தது .
எந்த ஒரு பிரத்யேகமான பராமரிப்பு இல்லாமலே. வெறும் மேய்ச்சலுக்கு மட்டுமே அனுப்பி வேளைக்கு இரண்டு லிட்டர் பால் கறந்தன.அதாவது கொட்டகைகள் கூட இல்லாமல் மர நிழல் களில் பராமரிக்கப் பட்டன
சாதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாதலால் பெரும்பாலும் எந்த நோயும் தாக்காது. குடல் புழு நீக்கம் தேவை இல்லை.
சிறிது வெள்ளை நிறம் காணப்படுவதால் வெயில் தாங்கும் சக்தி அதிகம். ஊருக்கு ஒரு எருமை கடா கடவுளுக்கு நேர்ந்து விட்டு விடுவதால் இனப்பெருக்கம் நடக்க தடை இல்லாமல் இருந்தது.
சக்தி வாய்ந்த பால் நாட்டு எருமை உடையது.குழந்தைகள் அந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடன் வளர்ந்தார்கள்.
சாணத்தில் நுன்னுயிர்கள் அதிகம்.அதாவது நாட்டு பசுக்கள் சாணத்தை விட.கோமியம் அடர்த்தியாக இருக்கும். அதாவது நைட்ரஜன் சத்து அதிகம்.
கன்றுக்குட்டி பிறந்த இரண்டரை வருடங்களுக்கு பிறகு சினைக்கு வர ஆரம்பிக்கும். சினைக்காலம் 300 நாட்கள். ஒரு நாட்டு எருமை எட்டு கன்றுக்குட்டிகள் வரை ஈனும் சக்தி உடையது. பற்கள் தேய்ந்து விட்டால் பிறகு சினை பிடிப்பது இல்லை.
No comments:
Post a Comment