நாங்களும் அமைச்சர்கள் தான்
பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்
பயிரின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. அனைத்து சத்துக்களும் மண்ணில் வெவ்வேறு அளவு உள்ளன.நம் மண்ணில் இவ்வகை சத்துக்கள் பயிரின் தேவையை விட குறைவாக இருந்தால் அவற்றை உரங்கள் மூலம் பயிருக்கு அளிக்கின்றோம். பயிருக்கு தேவையான சத்துகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை
மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)- கார்பன், ஹைடிரஜன், ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.
அதிகம் தேவைபடுபவை(Major Nutrient)-தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)
சிறிதளவு அதிகம் தேவைபடுபவை(Micro Nutrient)- கால்சியம் (Calcium), மெக்னீசியம் (magnisium), சல்பர் (sulfur)
குறைவான அளவு தேவைபடுபவை(Secondary Nutrient): இரும்பு சத்து(Fe), மாங்கனீசு(Mn), துத்தநாகம்(Zn), குளோரின்(Cl), போரான்(B), கோபால்ட்(Co), நிக்கல்(Ni) மற்றயவை.
பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது.
பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.
சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்
தழை சத்து -
அரசன் (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)
மணி சத்து -
ராணி (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)
சாம்பல் சத்து-
போகுவரத்து துறை அமைச்சர்( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )
கால்சியம்-
பாதுகாப்பு துறை அமைச்சர்(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )
மக்னீசியம்-
உள்துறை அமைச்சர்(பச்சயம் தயாரிப்பு - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )
சல்பர்-
பெட்ரோலிய துறை அமைச்சர்(எண்ணை உற்பத்தி)
துத்தநாகம்-
தழை சத்தின் செக்ரட்டரி(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது
இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை
தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட
வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும்
குறைவு. அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்) ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.
இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ
கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி
விடும்.
இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.
இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய
இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும்
ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம்.