என்னுடைய பெயர் கார்த்திக் .. நான் பட்டம் படித்து, அதற்கு மேற்படிப்பு முடித்து பல பெரிய வெளிநாட்டு கம்பெனிகளில் வேலைசெய்தவன்.. அந்த வேளைகளில் சலிப்பு ஏற்பட்டு விவசாயம் என்பதே நிரந்தரம் என்னும் முடிவோடு ஒரு விவாசாயியாக மாற துடிக்கும் ஒரு சராசரி மனிதன்..
என்னடா சிம்பிள்லா ஆரம்பிக்குறான்னு பாக்குறீங்களா.. என்னை பொறுத்தவரை இது பெரும் மாறுதல் என்றே எண்ணுகிறேன்.. ஒரு விவசாயியாக மாறும் என் முயற்சியில் எண்ணற்ற பிரச்சனைகள்.. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த இணையதளம்..
என்னை போன்ற முதல் தலைமுறை விவசாயிகள் கட்டாயம் என் அனுபவங்களை தெரிந்து கொண்டு இறங்குவீர்களே ஆனால் கட்டாயம் வெற்றி நிச்சயம்..
இப்படிக்கு,
வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்
முதல் தலைமுறை விவசாயி,,
என்னை பற்றிய மற்றும் என் அனுபவம் அறிய என்னை பின்பற்றுங்கள் ..
நன்றி..
No comments:
Post a Comment